புதன், 18 மே, 2011

யாழில். இந்திய உயர்கல்வி கண்காட்சி

யாழில். இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் மாபெரும் இந்தியக் கல்விக் கண்காட்சியொன்று யாழ் பொது நூலகத்தில் இன்று அரம்பாமாகியுள்ளது.

இக்கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள், பேராசியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்றைய ஆரம்ப நிகழ்வின் போது யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் எம்.மாகாலிங்கம், யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்.வசந்தி அரசரட்ணம், யாழ் நகர மேயர் யொகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக