ஞாயிறு, 29 மே, 2011

அதிமுக அரசின் சா(சோ)தனைகள் என்ற பெயரில் மதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு

தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்று இரண்டுவார காலம் ஆன நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அதிமுக அரசின் சா(சோ)தனைகள் என்ற பெயரில் மதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டி விவகாரம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில்,
சட்டசபை இடமாற்றம் ரூபாய் 1100 கோடி நஷ்டம்
சமச்சீர் கல்வி திட்டம் ரத்து ரூபாய் 500 கோடி இழப்பு
ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கொள்ளை சட்டம், ஒழுங்கு-சந்தி சிரிப்பு
சட்ட, மேல்-சபை முடக்கம் சர்வாதிகார ஆட்சியின் துவக்கம்
இவ்வாறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அதிமுகவின் சர்வாதிகார போக்கு தொடங்கியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்குள்ளாகவே, ஒரு சர்வாதிகார ஆட்சிதான் கொடுப்பேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சட்டசபை இடமாற்றம், சமச்சீர் கல்வி ரத்து என்று ஆயிரக்கோடி ரூபாயான மக்களின் வரிப்பணத்தை இன்றைக்கு பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக