ஞாயிறு, 8 மே, 2011

கல்வி கற்கும் உரிமைக்கு எதிராக போராட அழைக்கும் பள்ளி

(டைம்ஸ் ஆப்) இந்தியாவில் வந்த செய்தியில் இருந்து சில வரிகள்
Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School. In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student's performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.
The circular said that under the Act, the school would have no choice but to admit students from poor families, which would pull down its standards.
"These rules will be damaging to the class and the entire school, and therefore to your child's education," the circular said.
"All this will make all schools perform exactly like government schools in quality and discipline. Is this why we have admitted our children in this or any good school?" the circular asks.

படித்து பார்த்தவுடன் புல்லரிக்கிறதா ?

ஏழை மாணவர்களை சேர்த்தால் கல்வித்தரம் குறைந்து விடுமாம். அப்படி என்றால் பள்ளியின் தரம் என்று ஒன்றுமே இல்லையா. நன்றாக சொல்லிக்கொடுக்கும் பெற்றொருக்கு பிறந்த நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் இவர்களால் பாடம் எடுக்க முடியுமா ??

இவர்கள் பள்ளி தலை சிறந்த பள்ளி என்றால் எப்படிப்பட்ட மாணவர் என்றாலும் அவரை நன்றாக படிக்க வைக்க வேண்டியது தானே ??

ஏன் இது போன்ற கேள்விகளை யாரும் கேட்பதில்லை ??

இது போன்ற ஒரு அறிக்கையை அனுப்புவதற்கு வர்க்க பேதம் தவிர வேறு காரணங்கள் உண்டா ?? (தொலைக்காட்சியில் வந்த சோப்பு விளம்பரம் ஞாபகம் இருக்கா)

-oOo-

சரி

இப்பொழுது இந்த கல்வி கற்கும் உரிமை சட்டத்திற்கு வருவோம். இது சரியாஅல்லது அடிப்படையிலேயே கோளாறு உள்ளதா என்று எனக்கு சந்தேகமாகவே உள்ளது

தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட சில இடங்களை இலவசமாக அளிக்க வேண்டும் என்கிறார்கள்
  • அது யாருக்கு
  • அந்த இடங்களை எப்படி நிரப்புவார்கள்
  • அந்த இடங்களை யார் நிரப்புவார்கள்
  • யாருக்கு இலவச இடங்கள்
  • யாருக்கு கட்டண இடங்கள்
என்பது குறித்து விரிவான விதிகள் உள்ளனவா

சரி

ஒரு பள்ளியில் 100 இடங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். 75 மாணவர்களிடம் மட்டும் கட்டணச்சீட்டு அளித்து கட்டணம் பெற்றுக்கொண்டு, மீதி 25 மாணவர்களிடம் கட்டணச்சீட்டு அளிக்காமல் கட்டணம் பெற்றுக்கொள்வதை எப்படி தடுக்கப்போகிறார்கள் ?

உண்மையிலேயே சில மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அது யார் என்பதை யார் முடிவு செய்யப்போகிறார்கள் ?

கல்விக்கட்டணம் மட்டும் தான் இலவசமா அல்லது சீருடை, புத்தகம், பேருந்து எல்லாம் இலவசமா ?

சத்துணவு அனைத்து குழந்தைகளுக்கும் உண்டா அல்லது இலவசமாக கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மட்டும்தானா ?

இவை அனைத்தையும் விட எனக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி / சந்தேகம் / பயம் / தயக்கம் உள்ளது.

தனியார் கல்விக்கூடங்களில் இலவசமாக கற்றுக்கொள்ள வழி செய்து விட்டோமே என்று அரசு பள்ளிகளை புதிதாக திறக்காமல், ஏற்கனவே இருக்கும் பள்ளிகளுக்கு படிப்படியாக மூடுவிழா நடத்துவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கிறதா ??
-oOo-

மேற்கூறிய காரணங்களினால் கட்டாய கல்வி சட்டத்தை என்னால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (கடைசிகாரணம் தான் முக்கிய காரணம்)

ஆனால் அதே நேரம், மேற்குறிப்பிட்ட சுற்றரிக்கையை ஒரு பள்ளி முதல்வர் அனுப்பியதை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்பதில் சிறிதளவும் ஐயமோ தயக்கமோ கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக