சென்னை: "என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்,' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து பங்கு பிரிக்கப்பட்டபோது, எனக்கு தரப்பட்ட 100 கோடி ரூபாயில் 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்தினேன். எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது, கனிமொழிக்கு கிடைத்த இரண்டு கோடி ரூபாயை, பங்குத் தொகையாக செலுத்தி, கலைஞர் டி.வி.,யில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி, நான்தான் வலியுறுத்தினேன். கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என ஒப்புக்கொண்ட குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நஷ்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பொறுப்பேற்பது பொதுவான விஷயம். ஆனால், அந்த நிறுவனத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும், அவர்கள் பொறுப்பாவதில்லை.
டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில், கனிமொழிக்காக வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு, செலவு - கொடுக்கல், வாங்கல் இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என, தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இருந்தும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமினில் விட மறுத்து, சிறைக்கு அனுப்பியுள்ளனர். என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக