இந்தப் பூணூல்கள் கூட்டம், காஞ்சியில் சங்கரராமன், வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப்பகலில் பதறப் பதற வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல், இரண்டாவது குற்றவாளியாகி, சிறையில் இருந்த 1 ஆவது, 2 ஆவது சங்கராச்சாரியார்களுக்காக எப்படியெல்லாம் பதறினார்கள்? அலறி ஆளுநரைப் பார்த்தனர். டில்லியில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமய்யர் உட்பட பதறிக் கதறினர்; உண்ணாவிரதம் இருந்தனர்.
இப்போது அதிகமான சாட்சிகளைக் கலைத்து, வழக்கினை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட, சட்டத்தை வளைக்கப்படும் முயற்சிகள் நடைபெறுகின்றனவே, அதுபற்றி மூச்சுவிட்டது உண்டா?
இது அப்பட்டமான மனுதர்மம் அல்லாது வேறு என்னவாம்?
- Blogger Vinoth said... //மேம்பால ஊழல் வழக்கில் ரமெசு குடும்பமாக தற்கொலை செய்துகொண்டார்./மேம்பால ஊழல் வழக்கா? எப்போது..? நடைபெற்றது..? என்ன கண்டுபிடித்தார்கள்...? யார் சிறைக்கு போனார்கள்...? அப்போது என்ன பார்ப்பனரல்லாதோரா? ஆட்சி புரிந்தார்? என்ன ஆணையாளர் முத்துக்கருப்பன் போட்டு அனைத்தையும் உடைத்துவிட்டாரே...செல்வி ஜெயலலிதா வற்புறுத்தலின் பேரில் தான் அந்த வழக்கு பொய்யாக புனையப்பட்டது என்று நீதிமன்றத்திலேய கூறினாரே? நடுஇரவிலும் முன்னால் முதலமைச்சரை கைது செய்ததும் அவர் வற்புறுத்தலின் பேரில் தான் என்று போட்டு உடைத்தாரே..? அவர் என்ன பார்ப்பனரல்லாதோருக்கா? பணி புரிந்தார்...? ஏன்? முன்னாள் ஆணையாளர் நடராஜனும் ஆட்சியாளர் வற்புறுத்தலின் பேரில் பொய்யான வழக்கை ஜோடிக்க முனைந்தாரே, மேம்பாலத்துக்கு சம்பந்தபட்டவர் காவல் துறையினரை தாக்கியதாக பொய்ப்புகார் கொடுக்க துணை ஆணையரை வற்புறுத்தியும் கையொப்பம் இட மறுத்தாரே...என்ன வழக்குப் போடமுடிந்ததா? பாலத்தை தோண்டி தோண்டி பார்த்தார்களே என்ன? ஊழல் கண்ணுக்கு தெரிந்ததா..? இன்னும் கண்ணுக்கே தெரியவில்லையே...அப்போது என்ன பார்ப்பனரல்லாதோர் ஆட்சியா நடந்தது..? ஏன்? பிடிக்காதவரை கைது செய்யவேண்டுமென்றால் கஞ்சா போதுமே ? அவர் பெண்ணாக இருந்தாலும் கஞ்சா வைத்தால் மேட்டர் முடிஞ்சது...போயும் போயும் பெண்ணா? கஞ்சா கடத்துற வேலை பண்ணும்...? அவ்வளவு ரிஸ்க்கான வேலையை...? யாராக இருந்தாலும், என்ன? சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவா நாடு...? இல்லை மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா? என்ன செய்தாலும் நாங்கள் வாக்களிப்போம் என்று கூறிக்கொண்டிருக்க...? ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லையே தேவையில்லாமல் உயிர்கள் தானே பலியாயின...ஒரு குடும்பத்தை குழந்தைகளுடன் தற்கொலை புரியும் அளவுக்கு நெருக்குதலை கொடுத்தும் உயிர் பலி வாங்கியும் கண்டுபிடிக்க முடியவில்லையே... //சோனியா...பிராமணரா....?// இதை நோண்டிகொண்டிருக்கும் சுப்பிரமணியசாமி பிராமணரா இல்லையா...? மெல்ல அவல் கிடைக்கும், மெல்லலாம் என்று ஆதாயம் அடையத்துடிக்கும் பார்ப்பன பத்திரிகைகள் உண்டா இல்லையா...? அரசு நிலத்தை கையெழுத்து போட்டு விற்று விட்டு இது என் கையெழுத்து இல்லை என்றா கூறினார்...? இல்லை ஸ்பெக்டரம் ஏலத்துக்கு கையொப்பமே போடவில்லை என்று கூறினாரா? கூறிவிட்டு உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு ஆளானாரா? மேம்பாலம் கட்ட ஆணையிட்டுவிட்டு நான் ஆணையிடவில்லை என்று கூறினாரா...? இன்னும் எல்லாம் புஸ்ஸூல தானே நிக்குது...வழக்கு போட்டதிலிருந்தே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக