ஞாயிறு, 1 மே, 2011

இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிமேல் இரட்டைக் குடியுரிமை


இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே இனிவரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் முப்பத்தி ஐயாயிரம் பேருக்கு மேல் தற்போதைக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நிலையில் அண்மைக்காலமாக அரசாங்கம் இரட்டைக்குடியுரிமை வழங்கும் செயற்பாட்டைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.
மேலும் 1987ம் ஆண்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இரட்டைக்குடியுரிமை அந்தஸ்தை பாதுகாப்பு அமைச்சு தனக்கு நினைத்த நேரத்தில் இரத்துச் செய்ய முடியும் என்ற விதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இதுவரை அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் எதிர்காலத்தில் தமது இரட்டைக் குடியுரிமை அந்தஸ்தை இழக்கும் நிலையேற்படவும் கூடும் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கப்படும்போது அவர்களின் கடந்த கால செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் பங்குபற்றியிருக்காமை முக்கிய நிபந்தனையாக கவனத்திற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணங்கிப் போகும், வெளிநாடுகளில் இருந்தவண்ணம் தாய்நாட்டின் பிரசாரங்களுக்கு உதவியளிக்கும் நபர்களுக்கு மட்டுமே இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக