புதன், 18 மே, 2011

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் வீட்டில் இராணுவத்தினர் தேடுதல்

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புகலிகள் கட்சியின் சிவநேசதுரை சந்திரகாந்தனின் இல்லத்தில் இராணுவத்தினர் இன்று பிற்பகல் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பிலுள்ள அவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையை கண்டித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சாதாரண சட்டத்தின் கீழ் இத்தேடுதலில் பொலிஸாரே ஈடுபட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. தேடுதல் நடத்தப்பட்டவேளையில் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவ்வீட்டில் இருக்கவில்லை. இத்தேடுதலுக்கான காரணம் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக