வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்காகவும் அது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலும் 5 நீதிபதிகளை கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்றினை அரசாங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெறும் நீதிபதிகள் ஓய்வுபெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களில் மூவர் சிங்களவராகவும் ஒருவர் தமிழராகவும் மற்றொருவர் முஸ்லிமாகவும் இருப்பார்கள் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜுன் மாதம் இந்த விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் சாட்சியங்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழு சட்டங்களின் கீழ் நீதிபதிகள் சுயாதீனமாக கடமையாற்றுவார்கள். வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் இந்த ஆணைக்குழுவில் கடமையாற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்றும் பிரியந்த பெரேரா மேலும் கூறியுள்ளார்.
உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களினால் மேற்கொள்ளப்படும் முøறப்பாடுகள் குறித்து இந்த ஆøணக்குழு முக்கிய கவனம் செலுத்தும். எவ்வாறெனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்தவர்களும் தமது முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடிய>ம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை ஆøக்குழுவின் சிபார்சுகளை செயற்படுத்தாமல் விடுபவர்களை அழைத்து விசாரணை நடத்தப்படும். மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் மனித உரிமை உயர் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் ன்றும் ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா மேலும் கூறியுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதையடுத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டியது அவசியமென இந்தியாவும் வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்தே இந்த விசாரணை ஆணைக்குழுவினை அமைப்பதற்கு அரசாங்கம திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக