வியாழன், 19 மே, 2011

ரூ 50 லட்சம் வைர நகை - பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது

மும்பை - கணக்கில் வராத ரூ 50 லட்சம் பெறுமானமுள்ள நகைகளுடன் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பாவை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடந்த சர்வதேச பட விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியிருந்தார் மினிஷா லம்பா.

அப்போது அவரை சோதனை செய்ததில் கணக்கில் காட்டாத ரூ 50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நகைகளுக்கு மினிஷா அளித்த விளக்கம் ஏற்கக் கூடியதாக இல்லாததால் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர் சுங்கத் துறை அதிகாரிகள். அவரை விசாரிப்பதற்காக கைது செய்துள்ளனர் அதிகாரிகள்.

இதுகுறித்து மினிஷா தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.
English summary
Bollywood actress Minissha Lamba has been detained at Mumbai airport by customs officials on Wednesday. Minissha Lamba was carrying undeclared diamond jewellery worth over Rs 50 lakh. The Bollywood beauty was returning from Paris after attending Cannes Film Festival.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக