திங்கள், 30 மே, 2011

1000 படகுககளின் உரிமம் ரத்து; மீன் துறை அதிரடி

நாற்பத்தைந்து நாட்கள் தடைக்காலம் முடிந்ததையடுத்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தடைக்காலம் முடிந்ததும் டோக்கன் பெறாமல் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று மாலையே கடலுக்குச் சென்றுவிட்டனர். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 படகுகள் மட்டுமே டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றுள்ளன.
மண்டபம் பகுதியில் உள்ள 570 விசைப்படகுகளில் 234 படகுகள் மட்டுமே டோக்கன் வாங்கிச் சென்றன. 336 படகுகள் டோக்கன் பெறாமல் நேற்று மாலையை கடலுக்குச் சென்றன. அதேபோல, மண்டபம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட படகுகளில் ஒரு சில படகுகள் மட்டுமே டோக்கன் பெற்றுச் சென்றுள்ளன.
டோக்கன் பெறாமல் விசைப்படகுகள் கடலுக்குச் சென்றுள்ளது மீன்துறை அதிகாரிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மீன்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரனை நேரில் சந்தித்து டோக்கன் பெறாமல் சென்ற மீனவர்கள் குறித்து புகார் தெரிவித்தார்.

அனுமதி பெறாமல் சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மீன்துறை அனுமதி பெறாமல் சென்ற படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதோடு மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் மீனவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் கூறினர்.

 செபஸ்டியன் ராமேஸ்வரம்: அளவுக்கு அதிகமாக மீன்பிடி படகுகளுக்கு உரிமம் வழங்கி விட்டு இப்ப முழி முழி என்று முழிப்பதில் என்ன பயன்?
சிலோன் பிரச்சனை எந்தக்காலத்திலும் தீராது என்ற நம்பிக்கையில் இலங்கை கடலை நம்பி தொழிலை ஆரம்பித்த மீனவர்களுக்கு மதிய மாநில அரசுகளும் அனைத்து கட்சிகளும் பிராயச்சித்தம் செய்யவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக