செவ்வாய், 5 ஏப்ரல், 2011

போராளிகளின் பிரதான பிடித்தமாயிருந்த இடங்களெல்லாம் வளர்ச்சி பெற்று வருகின்றன,

தமிழ்புலிகள் இல்லாதாக்கப்பட்ட பின், வளர்ச்சி பெற்று வரும் ஸ்ரீலங்கா இழந்து விட்ட காலங்களை சரி செய்து வருகிறது
-  எரிக் எல்லிஸ் -     ஏப்ரல் 2.2011
என்னவென்று எழுச்சி பெறும் ஸ்ரீலங்காவை அழைப்பது?
நாடு இப்போது துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், மற்றும் விமான நிலையங்கள் என்பன அரும்பி வரும் ஒரு கட்டுமானப்பணி வலயமாகக் காட்சியளிப்பதுடன் முன்னாள் போராளிகளின் பிரதான பிடித்தமாயிருந்த இடங்களெல்லாம் வளர்ச்சி பெற்று வருகின்றன, என எழுதுகிறார் கொழும்பிலிருந்து எரிக் எல்லிஸ்.
இந்தியாவுடன் பொருளாதார பிரதான சக்திகள் இணைந்து வருவதுடன் மற்றொரு அரையிறுதிப் போட்டியாளரான பாகிஸ்தானுடனும் உறவுகள் இளகி வருவது, வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் இந்தப் பிராந்தியத்தின் மிகப் பெரிய அடையாள வெற்றி என்றே சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஸ்ரீலங்காவைப் பொறுத்தமட்டில். தமிழ் புலிக் கிளர்ச்சியாளர்களுடன் 25 வருடங்களாக நீடித்த அதன் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்குள்ளேயே அது வேகமாக முன்னேறி விட்டது. கொழும்பின் திறமையான விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழுவானது, திறமையில் அதற்குக் கொஞ்சம் கூடச் சளைக்காமல் இறுதிப்போட்டியில் அழுத்தம் காட்டக்கூடிய அதன் அயலவரான பழைய ராட்சச விலங்குடன் போராடி வெற்றியை தனக்குச் சாதகமாக்க முயலக் கூடும்.
எனவே கொழும்பில் இப்போது விழாக்காலம்,நான்கு தசாப்தங்களுக்கு முன்பிருந்ததைப் போல மறுபடியும் கலகலப்பாக மாறியிருக்கும் நகரம், அங்கு ஸ்ரீலங்காவாசிகள் தங்களுக்கு தாமதமாகக் கிட்டியுள்ள சமாதானப் பங்கிலாபத்தைச் செலவழித்துக் குதூகலிக்கிறார்கள்.
நீண்ட பல வருடங்களாக முற்றுகைக்குள் சிக்கியிருந்த தீவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களால் கைவிடப் பட்டிருந்தது, ஏன் உள்நாட்டுக்காரர்களால் கூடத்தான் அது புறக்கணிக்கப் பட்டிருந்தது. அவர்கள் தங்கள் புதையலை வெளிநாடுகளில் தேடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காலத்தில் லண்டனின் ராஜாக்கள் அரசாண்டகாலத்தில் அதன் சிறப்பான நாட்களை அனுபவித்த நகரமான கொழும்பு இப்போது தகர்ந்துபோய் உறங்கிக் கொண்டிருக்கிறது.
கொழும்பின் நிதி மாவட்டமான, பிரதான வங்கிச் சாலைகளைக் கொண்டிருந்த கோட்டையில் அவையாவும் இன்று துயரத்தின் சாயல் படிந்தவைகளாகவும் அதைக் கடக்க நினைக்கும் வருகையாளர்களுக்கு விமான நிலையத்தைப்போல் சோதனை செய்யப்படும் பாதுகாப்புக் கடவைகளைக் கடக்கவேண்டிய மட்டுப்படுத்தப்பட்ட  எல்லைகளையும் கொண்டுள்ளன. அவர்களால் அங்கு காணமுடிவது, தமிழ் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளால் துவம்சம் செய்யப்பட்ட வடுக்களைக் கொண்ட ஒரு பாழடைந்த நகரத்தை.
மேற்கத்தைய முதலீட்டாளர்களால் தீண்டத்தகாத நகரமாகக் கணிக்கப்பட்ட கொழும்பின் பிரதான வர்த்தக நண்பர்களாக மாறியிருப்பவர்கள், ஈரான், லிபியா,மற்றும் சீனா நாட்டவர்கள்.
இன்று மீண்டும் பெறப்பட்டிருக்கும் இந்த இழந்த உற்சாகம்கூட மிக நீண்ட வழியைக் கடந்துதான் வந்திருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு இதே வாரத்தில் அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் 2007ல் பார்படோஸில் நடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்ரீலங்காவை அடித்து துவைத்திருந்தார். ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூட வெற்றியின் நம்பிக்கையில் பிரிட்ஜ்டவுணுக்கு பயணப் பட்டிருந்தார். ஆனால் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தமிழ் புலிகள் கொழும்பின்மீது நடத்திய வான் தாக்குதல் காரணமாக சங்கடமான நிலையைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது.
அந்த திடீர் தாக்குதல் இரண்டு வருடங்கள் மட்டுமே அதிகாரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த ராஜபக்ஸவின் ஆட்சியை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகத் திட்டமிடப் பட்டதுடன் அதில் வெற்றியும் கண்டது. அந்தக் கேலிக் கூத்து நடைபெற்ற அந்த இரவில் நான் கொழும்பில்தான் இருந்தேன். புலிகளின் விமானிகளின் பார்வைக்கான வெளிச்சத்தை மறைக்கும் நோக்குடன் அரசாங்கம் கொழும்பின் மின்சார வினியோகத்தை துண்டித்தது. ஆனால் அது சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. ஏனெனில் பொதுமக்களின் பாவனைக்கான அரசாங்கத்தின் வழங்கல்கள் எல்லாம் அதிகாரத்தில் வீற்றிருக்கும் கொழுத்த பூனைகளால் தங்கள் தேவைக்காக நீண்ட முக்குகளால் தொட்டிக்குள் இருக்கும் தண்ணீரை உறிஞ்சிக் குடிப்பதைப்போல் நடத்தப்படும் தேவையற்ற திட்டங்கள் என்பதை ஸ்ரீலங்கா மக்கள் நன்கறிந்திருந்த காரணத்தால், அநேகமான மக்கள் டீசல் மூலம் இயக்கப்படும் மின்பிறப்பாக்கிகளையே தங்கள் மின்பாவனைக்கான முக்கிய பாகமாக நம்பியிருந்தார்கள். அதனால் மின்வெட்டு நடத்தப்பட்ட உடனேயே கொழும்பு திரும்பவும் வெளிச்சத்தில் குளித்தது.
விடுதியின் முகாமையாளர் என்ன நடக்கிறது என்பதை மற்ற விருந்தினர்களிடம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். விமான எதிர்ப்பு கோபுரங்களில் இருந்து எதிர்ப்புக் கணைகள் சீறிப்பாய்ந்தன. ஒரு கட்டத்தில் குவாலாலம்பூரில் இருந்து வந்து தரையிறங்கிய மலேசிய விமானம் புலிகளின் விமானம் எனக்கருதி இலக்கு வைக்கப்பட்டது.
நான்கு வருடங்கள் கடந்து விட்டன. புலிகளைத் தோற்கடித்தாகி விட்டது. சங்கடத்துக்குள்ளாகியிருந்த ராஜபக்ஸ கடந்தவருடம் அந்தத் திடீர் தாக்குதலால் தான் கடும் கோபம் கொண்டிருந்ததாக என்னிடம் தெரிவித்தார். அந்த இரவில் தொடங்கி மே 2009 வரை போரை அவர் வேகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார்.
மனித உரிமைகள் துஷ்பிரயோகம் சம்பந்தமாக ராஜபக்ஸ பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஆனால் பெரும்பான்மையான சிங்களவர்கள் அவரிடம் அளவுக்கதிகமான அதிகாரங்களைக் கையளித்துள்ளதுடன் அவர் உறுதியளித்துள்ள வளமான சமாதானத்தை அவர் வழங்குவார் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அநேகமாக ஆசியாவில் மிகவும் பாதுகாப்பான உறுதியுள்ள மனிதராக அவர்தான் இருப்பார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதுபோல அவரைச் சுற்றியுள்ள அவரது குடும்பத்தினரும் வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுகிறார்கள், ராஜபக்ஸ சிங்கப்பூரை போல தனி மனிதருக்கான அளவற்ற அதிகாரங்களை முன்மாதிரியாகக் கொண்டு இயங்குவதால் ஜனநாயக எதிர்ப்புகள் மற்றும் முக்கியமாக ஜனநாயகமே நடுநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் போரின் கடுமையினாலும் ஏழ்மையின் கொடுமையினாலும் ஸ்ரீலங்கா மக்கள் ஆணை செலுத்தும் அதிகாரத்தை ராஜபக்ஸவிடம் தாராளமாகவே கையளித்து விட்டார்கள் போலத் தெரிகிறது. இதுவரை காலமும் அவர்களின் குடும்பங்கள் அனுபவித்து வந்த செழுமை யாவும் அவர்களாலேயே பங்கிடப் பட்டுள்ளது. இதுவரையில் அதுதான் நடந்து வருகிறது. சீனா மேற்கிற்கும் மற்றும் இந்தியாவுக்கும் எதிராக பசுமை வயல்களின் சந்தைகளைத் தேடி விளையாட்டு நடத்தி வருகிறது, ஸ்ரீலங்கா இப்போது துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், மற்றும் விமான நிலையங்கள் என்பன நாடெங்கிலும் அரும்பி வரும் ஒரு கட்டுமானப்பணி வலயமாகக் காட்சியளிக்கிறது. முன்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களின் வட பகுதியும் முன்னேறி வருகிறது. ஸ்ரீலங்கா அதனால் மிகவும் மகிழ்ச்சியடைகிறது.
கடந்த வருடம் தீவின் பொருளாதாரம் சீனாவைப் போல 8 வீதம் அதிகரித்துள்ளதுடன் இந்த வருடமும் அதேயளவு விரிவாக்கத்தை கொண்டுவருவதுடன் அடுத்த வருடம் அதை இன்னும் அதிகரிக்க முடியும் என நம்பப்படுகிறது. கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள்
மதிய நேரத்தில் உல்லாச உணவு விடுதிகளில் தூங்கி வழியும் அரசாங்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரால் கடந்த வருடம் இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது.  சமாதானம் கிடைத்த முதல் வருடத்திலேயே இரண்டு மடங்காக உயர்ச்சி. அதேபோலவே சொத்துக்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் கடன் பெறுவது மூன்று மடங்காக விரிவடைந்துள்ளது. ஸ்ரீலங்கா வாசிகள் முதலீடு செய்வதற்காக கடன் பெறுகிறார்கள்.
ஸ்ரீலங்காவுக்கு வருகை தருவதற்கு இனிமேலும்; அச்சம் கொள்ள  வேண்டியதில்லை. 20 வருடங்களாக ஸ்ரீலங்காவுக்கு வருகை தரும் இந்தச் செய்தியாளரின் சமீபத்தைய வருகையின் போது விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் இராணுவ சோதனை நிலையங்களைக் காணமுடியவில்லை. வழக்கமாக போரின் உச்சக் கட்டம் நடந்து கொண்டிருக்கும் போது குறைந்தது 10 சோதனைச் சாவடிகளாவது இருக்கும்.
உல்லாசப் பயணிகள் திரும்பவும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் அவர்களின் வருகை 50 விகிதத்தால் அதிகரித்துள்ளதுடன், தங்கும் விடுதிகளின் கட்டண விகிதம் போர் நடைபெற்ற காலத்திலிருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கொழும்பில் உள்ள ஒரே ஒரு வெளிநாட்டு ஹோட்டல் சங்கிலி களைத்துப்போன ஹில்ரன் நிறுவனத்துக்குச் சொந்தமானது. எலிகள் நிறைந்த இந்தியாவின் தாஜ் மற்றும் குறைவான சமாதானம் சொல்லத்தக்க ஹொலிடே இன் என்பவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்போது சாங்கிரி – லா ஹோட்டல் சங்கிலி புறநகர்ப் பகுதியில் இராணுவ முகாம்கள் இருந்த இடத்தில் முன்னேறி வருகிறது. அதேபோல தெற்குக் கரையில் உல்லாசத் தங்கும் விடுதிகளும் ராஜபக்ஸவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் உருவாகி வருகிறது, சீனா 2பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதனை மீள்அபிவிருத்தி செய்துள்ளது. மரியட் மற்றும் ஹயாற் நிறுவனங்களும் ஹோட்டல்களையும் இங்கு நிர்மாணிக்க விரும்புகின்றன.
நீண்ட காலமாகப் புறக்கணிக்கப் பட்டு வந்த தீவின் தென்பகுதி இப்போது முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. இதற்கான ஒரு பகுதிக் காரணம் ராஜபக்ஸவை உற்சாகப் படுத்துவதே. இந்தப் பகுதியில்தான் ஸ்ரீலங்காத் தலைவர்கள் நீண்ட காலமாக தங்கள் இராணுவத்தை உருவாக்கி வந்தார்கள். ஆனால் ராஜபக்ஸவும் அவரது பரிவாரங்களும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்களது பிடி இராணுவ வெற்றி மூலம் நன்கு உறுதியாகி விட்டதால் அவர்களது சொந்த ஊரை சீனா  பூர்த்தியாக்கப்பட்ட பிரதான நகரப் பொருட்களைக் கொண்ட கப்பல் சரக்குகளை மாற்றி ஏற்றக்கூடிய துறைமுக நிலையமாகவும், மற்றும் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெயை அமெரிக்க -  சிங்கப்பூர் கூட்டு நாடுகளுக்கு, கிழக்கு நோக்கி மேலும் பயணமாவதால் உண்டாகும் அதிக நாள் பயணச்செலவை குறைக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இவை யாவும் ஒரு குழப்பமான நிலைக்கே முன் நகர்த்துகிறது – அதை என்னவென்று எழுச்சி பெறும் ஸ்ரீலங்காவென்று அழைப்பது?
சமீபத்தில் கடந்து சென்ற அதன் துன்பமான கடந்தகாலம் கொடுத்திருப்பது,வளர்ச்சி பெற்ற அதன் அயலவர்களும் தங்களுடையதைப் போல வெளிக் கொண்டுவர விரும்பும் ஒரு புலிப் பொருளாதாரம் என அழைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக