செவ்வாய், 5 ஏப்ரல், 2011

விஜயகாந்திற்கும் எனக்கும் தான் பைட்'

மதுரை:தேர்தலில், "உனக்கும் எனக்கும் தான் பைட்' என மதுரையில் நடிகர் வடிவேலு, விஜயகாந்திற்கு சவால் விட்டார்.பிரசார கூட்டங்களில் வடிவேலு பேசியதாவது:முதல்வரின் திட்டங்களால் இன்று சந்து பொந்தெல்லாம் 108 ஆம்புலன்ஸ் வந்து செல்கிறது. பல்லு இல்லாதவங்களிடம் எல்லாம் இன்று "செல்லு' இருக்குது. இதற்கு காரணம் நமது முதல்வர். அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினார். ஆனால், அவர்கள் (அ.தி.மு.க.,) அறிவித்துள்ள திட்டங்கள் எல்லாம் வரும்... ஆனால் வராது... விஜயகாந்த் என்னிடம் "நான் நடித்த ஒரு சினிமாவில் "வருங்கால முதல்வர்' என சொல்லச் சொன்னார். அதற்கு நான் மறுத்து விட்டேன். அதனால், என் வீடு மீது தாக்குதல் நடந்தது. நீயும்(விஜயகாந்த்), நானும் மதுரைக்காரர்கள் தான். இரண்டு பேரும் மோதிப்பார்ப்போம். இந்த தேர்தலில் உனக்கும், எனக்கும் தான் பைட்."அவர்கள் தருவதை வாங்கிக் கொண்டு எதிராக ஓட்டு போடுங்கள்' என, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அவ்வாறு நீங்கள் எந்த காலத்திலும் செய்து விடாதீர்கள், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக