ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

புலிகளின் ஆயுதப்பரம்பலை சர்வதேசம் கட்டுப்படுத்தியது – த ஹிந்து தகவல் வெளியீடு

 by teavadai

சமாதான உடன்படிக்கை மீறப்பட்டு ஏறத்தாழ யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் அமெ ரிக்காவுடன் இலங்கை கூட்டிணைந்து விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக்கொள் வனவுகளை இடைநிறுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என த ஹிந்து பத்திரிகையின் ஊடாக விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேசக் செயற்பாடுகள் 2006ஆம் ஆண் டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிபுக்குவந்து யுத்தம் தொடங்கப்பட்ட காலப் பகுதியிலேயே அமெரிக்கா இத்திட்டத்தை முன்னி ன்று தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சட்டவிரோதமாக நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவை ஆகியவற்றை தடுக்கும் முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த திட்டத்திற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் இந்த தொடர்பாடல் குழுக்களின் செயற்பாடுகளுக்கு இந்தியா வையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அமெரிக்காவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
ஸ்தம்பித்துப்போன சமாதானச் செயற்பாடுகள் விடயத்தில் எவ்வாறான நடவடிக்கை களை எடுப்பது என்பதில் அமெரிக்கா இருக் கின்ற பக்கத்திலேயே இந்தியாவும் இருப்தாக அமெரிக்கா நம்பியது. இலங்கைத் தமிழர்களின் அபிலாஷை களை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என்ற விடுதலைப் புலிகளின் பிரசாரத்தை முறியடிக் கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியல் தீர்வினை முன்வைக்கச் செய்து விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் பண பலத்தை முறியடிப்பது என அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி.ஜே.லண்ஸ்டட் 2006 மே 3ல் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ள கேபிளில் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி அனுப்பப்பட்டு எட்டு தினங்களின் பின்னர்தான் விடுதலைப் புலிகள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதே வருடம் ஜூன் மாதத்துக்குப்பின் அனுப்பப்பட்டுள்ள தகவல்களின்படி இந்தக் குழுக்கள் பற்றி இந்தியா மகிழ்ச்சியாகக் காணப்பட்டது.
இந்த சர்வதேசத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு இலங்கை கோரியுள்ளது.இந்தத் தொடர்பாடல் குழுக்களின் விபரம் மற்றும் அதன் சேர்க்கை பற்றி முதற்தடவை யாக 2006 ஆகஸ்ட் 21ல் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப் பட்டுள்ள கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனே சியா, இத்தாலி, ஜப்பான்,மலேஒயா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடு களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்தக் குழுக்கள் அமைந்துள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக