ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்ய சாயி பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

சத்ய சாயி பாபாவின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் மற்றும் நெஞ்சுக் கோளாறு காரணமாக புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் மார்ச் 28 ஆம் திகதி சத்ய சாயி பாபா அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை அவருக்கு திடீரென சுவாசம் விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சத்ய சாயி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஏ.என்.சஃபயா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். தற்போது சத்ய சாயி பாபா சுலபமாக மூச்சு விடுவதாகவும் அனைத்து முக்கிய உறுப்புகளும் இயல்பாக செயல்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக