ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

சத்ய சாயி பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்


புட்டப்பர்த்தி,ஏப்.- 7 - பகவான் சத்ய சாயி பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. நேற்றுமுன்தினம் இருந்தது மாதிரியே நேற்றும் சாயி பாபாவின் உடல்நிலை இருந்தது. ஆனால் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனளித்து வருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் தெய்வமாக வணங்கும் சத்ய சாயி பாபாவுக்கு கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி திடீரென்று உடல்நிலை பாதித்தது. அவருக்கு நெஞ்சு  இறுக்கமும், சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது. நுரையீரலிலும் பாதித்தது. மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.  இதனையொட்டி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருந்தும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியது. இருந்தபோதிலும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சையின் பலன் திருப்திகரமாக இருக்கிறது என்று டாக்டர்கள் கூறினாலும் அவரது உடல்நிலை நேற்றுமுன்தினம் கவலைக்கிடமாக இருந்தது மாதிரியே நேற்றும் இருந்தது என்று சத்ய சாயி பாபா மருத்துவமனை இயக்குனர் ஏ.என்.சப்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இருதய துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவைகள் சரியாக இருக்கின்றது. இன்னும் செயற்கை சுவாச கருவி மூலம்தான் சுவாசித்து வருகிறார். டையாலிஸ் குறைக்கப்பட்டுள்ளது. அவரது உணர்வில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக