புதன், 20 ஏப்ரல், 2011

வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகளிடம் குழப்பம்: 4 நாள் அவகாசம் போதுமா?

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றன. ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், புதிய அரசு பதவியேற்பதற்கு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், இதற்குள் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று கவலை அடைந்துள்ளன.

அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், மே மாதம் 13ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம். தேர்தலுக்கு போதிய கால அவகாசம் தராததற்கும், ஓட்டு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்ததற்கும், ஆளும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் கமிஷனை கடுமையாக அர்ச்சித்து வருகின்றன.இந்நிலையில், வெற்றியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிரதான கட்சிகளிடையே திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 16ம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 17ம் தேதி, சட்டசபையை கூட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அத்தேதியுடன் சட்டசபை ஆயுட்கால வரையறை முடிகிறது.இதுபோன்ற சூழலில், ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், வெறும் நான்கு நாட்களே அவகாசம் இருப்பதால், இந்த குறுகிய காலத்திற்குள் ஆட்சி அமைக்க தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று, கட்சிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமெனில், 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள தி.மு.க., தனித்து ஆட்சி அமைப்பதில் சாத்தியமில்லை. இதை கருணாநிதியும் உணர்ந்துள்ளார். அதனால் தான், "கூட்டணி ஆட்சி அமைக்க தி.மு.க.,விற்கு தயக்கம் எதுவும் இல்லை' என, ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். எனவே, கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார், யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை. முதலில் முதல்வர், மற்ற இரு அமைச்சர்கள் பதவி ஏற்பு என்றாலும், அதைப் பேசி முடிவு செய்வதற்கு காலஅவகாசம் தேவை.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இக்கட்சி 160 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால், எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஓரிரு நாளில் அ.தி.மு.க., அரசு பதவியேற்கலாம். அதிலும் அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கும் போது கூட்டணிக் கட்சிகள் வருத்தமுறாதவகையில் தேர்வு தேவை. வேட்பாளர் பட்டியல் போல, முதலில் அறிவித்து பின்பு மாற்றினால் அது பிரச்னையை ஏற்படுத்தும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை வந்தால், அதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

தே.மு.தி.க.,வைப் பொறுத்தவரை, "ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்' என, தெளிவாக கூறிவிட்டது.எனினும், இரு அணிகளிலும் இழுபறியான நிலை காணப்பட்டால், தேர்தல் முடிவுக்குப் பின், ஒவ்வொரு கட்சியில் இருந்தும், "இழுக்கின்ற' வேலைகள் நடக்கலாம். இதனால், கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படப்போவது உறுதி. இதையெல்லாம் நினைத்து, அரசியல் கட்சிகள் இப்போது குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியின்றி தவித்து வருகின்றன.

எப்படியிருந்தாலும், எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ, அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளிக்க வேண்டும். அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார்.ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதுடன், குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.அதைவிட, தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 13ம் தேதியே தெரிந்த போதும், வெற்றி பெறும் வேட்பாளர், தேர்தல் அதிகாரியின் சான்றிதழை அதே நாளில் பெற்றாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவுகளை கமிஷன் அறிவித்து, சட்டசபையை கூட்டுவதற்கான அறிவிப்பு தொடர வேண்டும். அதற்குப் பின், இடைக்கால சபாநாயகர் தேர்வு என்று ஏராளமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால், இத்தடவை தமிழகத்தில் முற்றிலும் வித்தியாசமான தேர்தல் மட்டுமல்ல, காத்திருப்புக்குப் பின் அரசு அமைவதும் பெரிய விவாதப் பொருளாகியிருக்கிறது.
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
2011-04-20 03:51:42 IST Report Abuse
எல்லாம்தான் நடக்கும் வெறும் ஊழலை பண்ணி கொண்டாட்டம் போட்டுக்கிட்டே இருக்கமுடியுமா தேர்தல்னா...இப்புடித்தான் என்பது இப்பதானே தெரியுது...தன்னாலே வெளிவரும்...கட்சிகள் இப்ப தூக்கம் இல்லாம தவிக்குது...ஆட்சி வந்தப்புறம் மக்கள் துக்கத்தோடு இருக்கப்போவுது ..தமிழ்நாட்டில ஒரு அன்னா ஹசர‌ேய் வரணும் ..ம்....மக்களுக்கு எப்படி நல்ல ஆட்சி கொடுக்க போறீங்கன்னு யோசிச்சா உங்க கட்சிகளை மக்கள் யோசிப்பாங்க..யாரு என்ன மந்திரி எப்படி சாப்பிடலாம் ...நல்ல யோசனை இப்படியே போங்க
santhosh gopal - vellore,இந்தியா
2011-04-20 01:25:21 IST Report Abuse
மஞ்ச துண்டு குதிரை பேரத்தில் ஈடுபடும் என்று தெரிந்தே திமுகவுக்கு அணைத்து இடத்திலும் செக் வைத்துள்ளது தேர்தல் ஆணையம். நான்கு நாட்களில் ஆட்களை இழுப்பது கடினம். மேலும் தனித்து ஆட்சி, கூட்டணி ஆட்சி என்பது திமுக கனவிலும் நடக்காத ஒன்று. ஏன் என்றால் திமுக கூட்டணி ஐம்பது தொகுதிகளுக்கு மேல் செல்லாது. மறுபுறம் வலுவான கூட்டணி என்று பெயர் வாங்கிய அதிமுக 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றும். கொடநாட்டிற்கு செல்கிறார் என்றால், காரணம் இல்லாமல் செல்ல மாட்டார், தேமுதி கூட்டணி முடிவானதே கொடநாட்டில் தான். பல முக்கிய முடிவுகள் அங்கு தான் எடுக்கபடுகிறது, காரணம் சென்னையில் எடுக்கும் முடிவுகள் அணைத்து திமுகவுக்கு விரைவில் போய்விடுகிறது, மேலும் உளவு துறை போலீஸ் போன்ற எந்த தொந்தரவும் கொடநாட்டில் இல்லை, அதனால் வெளியில் இருந்து பார்பவர்களுக்கு ஒய்வு எடுக்க செல்வதாக தெரியும், ஆனால் முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு மட்டும் தான் தெரியும், என்ன முடிவுகள் அங்கு எடுக்கபோகிறார்கள் என்று. வட நாட்டை சேர்ந்த பிரபலமான பத்திரிக்கை EXIT POLL எடுத்துள்ளது, அந்த அறிக்கையை அம்மாவிடம் கொடுத்துள்ளது, அதில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெரும் என்று. பத்து தொகுதி கூடலாம் அல்லது குறையலாம் ஆனால் 180 தொகுதிக்கு குறையாது என்று கூறியுள்ளது, இதே EXIT POLL 2006 அதிமுக பதவியை இழக்கும், திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியது, ஆட்சி அமைக்க குறைந்த அவகாசம் உள்ளதால், மந்திரி பதவிகள் தேர்ந்டுக்கும் வேலையை நடத்த கொடனாடிற்கு சென்றுள்ளார். இந்த முறை குதிரை பேரம், பன்றி பேரம் எல்லாம் நடைபெற வாய்ப்பு இல்லை. அதிமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். திருவாரூர் தொகுதியில் குடவாசல் ராஜேந்திரன் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி உண்டு. கொளத்தூர் தொகுதியில் சைதை துரைசாமி ஜெயித்தால், கல்வி துறை அமைச்சர் தரபோவதாக தகவல் வந்துள்ளது. இது போல உத்தேச அமைச்சர் பட்டியல் தாயார் செய்ய கொடனட்டிர்க்கு சென்றுள்ளார். மே 17 அதிமுக ஆட்சி அமைக்கும், இது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஓட்டை பிரிக்கும் தேமுதிக அதிமுகவிடம் உள்ளதால், சிறிதளவும் பயப்பட தேவையில்லை. AIADMK WILL
2011-04-20 03:19:25 IST Report Abuse
தென்னவன் அவர்களே, என் கருத்தை நன்றாக படியுங்கள், நான் பதினாலு தொகுதி வெற்றிபெறுவார்கள் என்று சொன்னதும் உண்மை தான், அது தேர்தலுக்கு முந்தய கணிப்பு படி. தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு படி ஐம்பது தொகுதிகளுக்கு குறைவாக தான் திமுககூட்டணி கைப்பற்றும், அது 14 ஆகவும் இருக்கலாம், 25 ஆகவும் இருக்கலாம், 45 ஆகவும் இருக்கலாம். நீங்கள் சொல்லுவது ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. பீகார் தேர்தலில் CNN IBN தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு சரியாக அமைந்தது, அதே போல குஜராத், கர்நாடாகா அனைத்திலும் சரியாக வந்துள்ளது. 2006 ல் கருத்து கணிப்பில் திமுக தான் கைப்பற்றும் என்று கூறியது, அதே போல் நடந்தது. வேண்டும் என்றால் google தேடலில் EN WIKIPEDIA வில் 2006 தமிழக சட்டமன்ற தேர்தலை பாருங்கள், கீழே இந்த தேர்தல் முடிவுகளை சுலபமாக கணித்துவிடலாம், ஏன் என்றால் மாற்றத்தை விரும்பும் மக்கள் 11 % கூடுதலாக வாக்களித்துள்ளார்கள். MGR க்கு பிறகு தொடர்ந்து யாரும் ஆட்சியில் இருந்ததில்லை. ஒரு முறை திமுக என்றால், இன்னொரு முறை அதிமுக தான். அதனால் இந்த முறை அதிமுக தான். மே 13 தேதி அன்று பார்க்கபோகிரீர்கள்....

Thennavan - Chennai,இந்தியா
2011-04-20 02:45:12 IST Report Abuse
என்ன சந்தோஷ்..... போன வாரம் வரைக்கும் திமுக கூட்டனிக்கு எதோ பதினான்கு தொகுதி சொன்னிங்க.....இப்ப கொஞ்சம் இரக்கப்பட்டு ஐம்பது சொல்றிங்க....அப்பெடிய ஒவ்‌வொரு வாரமும் கூட்டிகிட்டே போங்க.........அப்பரம் EXIT POLL (தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு ) பத்தி சொல்லி இருக்கீங்க.....உங்களுக்கு தெரியுமா தெரியாதோ....இரண்டு EXIT POLL ரிசல்ட் வந்து இருக்கு....ஒன்னு அதிமுக Favor அப்பரம் இன்னொன்னு திமுகவுக்கு Favor....EXIT போல் எப்ப உண்மைய இருக்கும் என்றால் மாநிலத்தில் ஒரு அசாதாரண சுழல் இருக்கும்பொது.....அதாவது மாநிலத்தின் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருக்கும்பொது....உதாரனத்திற்கு 1991 or 1996 election மாத்ரி.....இதுக்கு காரணம் EXIT போல் ஒரு குறிப்பிட்ட சில நகரத்தில் எடுக்கபடுவது தான்.......நீங்கள் சொன்ன EXIT போல் மற்றும் நான் சொன்ன EXIT போல் ரெண்டும் சென்னை,கோவை, மதுரை,திருச்சி மட்டும் எடுக்கபட்டவை.....அதிலும் ஒன்று திமுக என்கிறது மற்றொன்று அதிமுக் என்கிறது..... ஆக மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவை கணிப்பது அவ்வளவு எளிது இல்லை என்பது தான் உண்மை.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக