ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பொலிஸ் சேவையில் இணைய வடக்கிலிருந்து 3 ஆயிரம் விண்ணப்பங்கள்


police2 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளைச் சேர்த்துக்கொள்ள நேர்முகப் பரீட்சைகளை நடத்துவதற்கு இலங்கைப் பொலிஸ் திணைக்களம் திட்டமிடுகிறது.  பொலிஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்குவதற்கு நேர்முகப்பரீட்சை ஏப்ரல் 21 இல் ஆரம்பமாகுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்திருக்கிறது. இதேவேளை, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்துக்குக் கிடைத்திருக்கிறது. முன்னர் வட மாகாண இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைவதில் விரும்பம் கொண்டிராத தன்மையிருந்ததாகவும் இப்போது குறிப்பிடத்தக்களவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வட மாகாணத்திலிருந்து கிடைத்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் கூறுகிறது. ஆனால், இரண்டாயிரம் வெற்றிடங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் 400 வெற்றிடங்கள் உதவி இன்ஸ்பெக்டர்களுக்கும் 1600 வெற்றிடங்கள் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சாரதிகளுக்கும் உள்ளன. ஆண்கள்,பெண்கள் என இரு சாராரும் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அவர்களுக்கு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிகள் அளிக்கப்படும். வட,கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டிலுள்ள பல நிலையங்களில் நேர்முகப்பரீட்சை இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக