திங்கள், 4 ஏப்ரல், 2011

தேர்தல் 2011 - யாருக்கு வாய்ப்பு


பலகாலமாக நகர்ப்புறத்தில் படித்த ஆண்கள் திமுகவிற்கும், கிராமப்புற தலித் பெண்மணிகள் பெரும்பாலும் அதிமுகவிற்குமாக வாக்களித்து வந்தனர். ஆனால் இனி நிலைமை அப்படி இருக்காது என்று சொல்லுகிறார்க்ள். திமுகவும் இம்முறை தனது பாரம்பரிய நகர்ப்புற ஓட்டுவங்கியை விட்டு அவசர அவசரமாக வெளியேற முடிவு செய்திருக்கிறது. காரணம் நகர்ப்புற படித்த வர்க்கத்தினரிடையே 2G ஊழல் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி தொடர்பான கவலைதான். இந்த முறை கர்ண பரம்பரை போல் நகரிலுள்ள 16 தொகுதிகளில் 5 தொகுதிகளை மிகவும் எளிதாக கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தாரை வார்த்து விட்டது. இவ்வாறு நகர்ப்புற தொகுதிகளை விட்டு ஓட்டம் பிடித்ததில் முன்னோடியாக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியே அங்கம் வகிக்கிறார். 1967 லிருந்து, நகர்ப்புறத்தை விட்டு வெளியே செல்வது கருணாநிதிக்கு இதுவே முதன்முறை.இதற்கு அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் காரணம், கருணாநிதி தனது சொந்த ஊர் தொகுதியிலிருந்து போட்டியிட விரும்புகிறார் என்பது, இந்த வாதத்தை திமுக தொண்டனே ஏற்றுக்கொள்ள மாட்டான். 2G ஊழல் தொடர்பான விழிப்புணர்ச்சி சென்னை நகர மக்களிடையே அதிகமாக இருப்பதால், திமுகவின் முன்னணித் தலைவர்கள் எவரும் அங்கு போட்டியிடத் துணியவில்லை என்பது தான் நிஜம். காங்கிரஸ் கட்சியானது, திருவிக நகர், ராயபுரம், மைலாப்பூர், தி.நகர் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. திமுக தலைவரின் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினும் தனது விருப்பத் தொகுதியும், தொடர்ந்து மும்முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டு, சென்னையின் எல்லைப்புறத் தொகுதியான கொளத்தூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். 2006 தேர்தல்களில் நேரெதிரிடையாக திமுக 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. சென்ற தேர்தலிலேயே நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவிற்கு செல்வாக்கு கிட்டியது வெளிப்படையாகத் தெரிந்ததே இம்மாற்றத்திற்குக் காரணம் என்கிறார் ஸ்டாலினின் முந்தைய ஆயிரம் விளக்கு தொகுதியில் 2001 தேர்தலில் 70 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 46 ஆகக் குறைந்தது. மற்றொரு உதாரணம் துறைமுகம் தொகுதி. இதை திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான அன்பழகன் தனக்கு சொந்தமாகவே மாற்றியிருந்தார். 1996 இல் 70 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்ற இவர், 2006 இல் பெற்ற வாக்கு சதவிகிதம் 44. திமுகவின் மற்றொரு கோட்டையான திருவல்லிக்கேணியில் 2006 தேர்தலில் அதிமுகவின் ஃபதர் சயீத், திமுகவின் நாகநாதனை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கினார். இவர் திமுகவின் அன்றைய தேர்தல் அறிக்கையின் சிற்பி என்று அறியப்பட்டவர். சான்ஸ் கொடுத்தால் திமுக தலைவர்கள் ஆந்திரா, கர்நாடகா எல்லையில் கூட நிற்பார்கள்.

இந்த முறை கருத்து கணிப்பு என்ன சொல்லுகிறது என்று பார்க்கலாம்.


லயோலா கல்லூரி கருத்து கணிப்பு இவ்வாறு சொல்லுகிறது "5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59 தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது"

இந்தியா டுடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக