வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Credit card மோசடியை தடுக்க நிபுணர்கள் குழு: விசாரணைகளில் பொலிஸாருக்கு உதவ ஏற்பாடு

கிரடிட் கார்ட்’ மோசடியை தடுக்க நிபுணர்கள் குழு: விசாரணைகளில் பொலிஸாருக்கு உதவ ஏற்பாடு
கிரடிட் கார்ட் (கடன் அட்டை) மோசடியை தடுப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொடுப்பனவு முறை மோசடி தொடர்பான சட்டத்தின் பிரகாரம் கிரடிட் கார்ட் மோசடி குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு பொலிஸாருக்கு உதவுவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்; 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கொடுப்பனவு முறை மோசடி தொடர்பான சட்டத்தின் கீழ் கிரடிட் கார்ட் மோசடி மற்றும் அது தொடர்பான மோசடிகளை விசாரிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு விசாரணைகளின் போது உதவுவதற்காக பொறியியல் துறை மற்றும் மென்பொருள் பொறியியல் தொடர்பில் தகைமை யுள்ள நபர்களடங்கிய குழுவொ ன்றை நியமிக்க முடிவு செய்யப் பட்டது. அதன் படி விசேட வர்த்தமானி மூலம் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ள தோடு இதற்கு பாராளு மன்ற அனுமதி பெறுவதற் காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். இந்த நிபுணர்கள் குழுவில் ஹேமசிறி கருணாநாயக்க, துவான் இர்சாத் ஹலால்தீன், பிமல் குணபால, நளின் சரத்குமார, கே. ஜி. பி. சிரிகுமார ஆகியோர் அங்கம் வகிக் கின்றனர். இலங்கை கணனி அவசர பொறுப்புணர்வு அமைப்பும் இதில் அங்கம் வகிக்கிறது. கிரடிட் கார்ட் மோசடிகள் நடைபெற்றதோடு இவற்றை தடுக்கும் வகையில் புதிய நிபுணர்கள் குழு செயற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக