வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Colombo விமான நிலையத்தில் காணாமல் போன 6 கோடி ரூபா தங்கம் மீட்பு ; 7 பேர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காணாமல் போன சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இத்தங்கம் காணாமல் போனமை தொடர்பாக உள்ளூர் விமான சேவை நிறுவனமொன்றின் ஊழியர்கள் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் நடத்திய முற்றுகையொன்றின்போது, 22 லட்ச ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். தங்க பிஸ்கட்டுகள் சிலவற்றை விற்பனை செய்து பெற்ற பணம் இதுவென பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். செட்டியார் தெருவிலுள்ள நகையகமொன்றின் உரிமையாளர் இறக்குமதி செய்த 5 கோடி பெறுமதியான தங்கம் உட்பட 6 கோடி பெறுமதியான தங்கம் மார்ச் 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சரக்குப் பிரிவு களஞ்சியசாலையில் வைத்து காணாமல் போனமைகுறிப்பிடத்தக்கது. சுமார்15 கிலோ எடையுடைய 126 தங்க பிஸ்கட்டுகளும் நகைகளும் காணாமல் போயிருந்தன. குற்றப் புலனாய்வுப் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர். அதேவேளை, இது தொடர்பாக விசாரணைகளுக்காக சிரேஷ்ட சுங்க அதிகாரிகள் இருவரை சுங்கப்பணிப்பாளர் நாயகம் சுதர்ம கருணாரட்ன நியமித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக