திங்கள், 28 மார்ச், 2011

மதிமுக, ஆட்சி அதிகாரத்திற்காக ஆலாய்ப் பறக்கும் கட்சியன்று நாஞ்சில் சம்பத்


Balasubramanian - Southampton,யுனைடெட் கிங்டம்
2011-03-12 11:27:32 IST Report Abuse
ஒரு நடுநிலையாளன் என்ற முறையில் என் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆததரவு பெருகி இருந்தாலும், அவரின் சமீப நடவடிக்கைகளே அவரை தோல்வி அடையச் செய்யும். அவர் செய்யும் மிகப் பெரிய தவறு ம.தி.மு.க விற்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முதலில் இடம் ஒதுக்காததுதான். விஜயகாந்த், விஜய், சரத்குமார், கார்த்திக் என பலர் இருந்தாலும் விஜயகாந்திற்கு மட்டுமே சோதிக்கப்பட்ட வாக்கு வங்கி உள்ளது.மேலும் ஆளும்கட்சியின் பண பலத்திற்கு இவர்களின் தொண்டர்கள்(ஆ.தி.மு.க உட்பட ) விலை போகும் அபாயமும் உள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் தொண்டர்களை எப்போதும் விலைக்கு வாங்க முடியாது. அது போல வைகோவிற்கு துரோகம் செய்த தலைவர்கள் இருக்கலாம். ஆனால் அவரின் தொண்டர்கள் விலை போக மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் பண பலம் மிக்க ஆளும் கட்சியின் சதிகளை முறியடிக்க இவ்விரு கட்சிகளின் தொண்டர்களின் பங்கு மிக முக்கியமானது. பூத் கமிட்டியில் உள்ளவர்கள் விலை பொய் விட்டால் யார் பிரச்சாரம் செய்தும் பயன் இல்லை. நடிகர்களின் கவர்ச்சி கூட்டம் சேர மட்டுமே பயன்படும். ஆனால் ஒட்டு வாங்குவதற்கு வைகோவின் பிரச்சாரமும், வீடு வீடாக சென்று தேர்தல் வேலை செய்யும் கம்யூனிஸ்ட் காம்ரேடு களின் செயல்திறனும் முக்கியம் என்பதை ஜெயலலிதா உணராவிடின் அவருக்கு தோல்வி நிச்சயம்.
 
T . Arulmony - Chennai ,இந்தியா
2011-03-17 13:11:36 IST Report Abuse
நாஞ்சில் சம்பத் பணிக்கர் ஒரு கேரள காரர். வைகோ தெலுங்கு பேசுகிறவர். இவர் மலையாளம் பேசுகிறவர். இருவரும் அழகு தமிழ் பேசும் வார்த்தை சித்தர்கள். இவர்கள் அழகாய் தமிழ் பாடல் பாடும் TMS - தாய் மொழி சவுராஷ்டிரா SP பாலசுப்ரமனியம், சுசிலா, Viajyakanth - தாய் மொழி தெலுங்கு, சித்ரா -தாய் மொழி மலையலாம், ரஜினி ,ஜானகி -தாய் மொழி கன்னடா போல சினிமாவில் புகழ் அடைவதை விட்டுவிட்டு ஆட்சி கட்டிலில் அமர நினைப்பது கொஞ்சம் இடிக்கிறது. இன்னொரு ஊரில் இருந்து vanthu கலை நிகழ்ச்சி நடத்துவதை பார்கலாம். eppadi aalvathai anupathipathau. ithu thirumpavavum கனடா Jaya malyali MGR போல alavtharku vallai saithu vidum. Vanthorai vaala vaikum tamilakam sontha nattai aalla anumathipathu nallathu illai....
 
Varun Ramesh - Chennai,இந்தியா
2011-03-09 14:43:46 IST Report Abuse
கட்டபொம்மனின் வழித்தோன்றலாக தன்னை பாவித்து கொள்கிற தன்மான செம்மல் உமது அரசியலாசான் வைகோ, 19 மாதம் பொடா சிறை வாசம் செய்ததற்கு பின்னர் "ஆஹா! என் பாசமிகு சகோதரி" என்று கூட்டணிக்கு தயாரான போது "அச்சமும் பேழமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்ட ஊமை ஜனங்களை கொண்டது தான் ம தி மு க " என கருணாநிதி மட்டுமல்ல தமிழகமே தெரிந்து கொண்டது. இது போன்ற கோழைகள் உள்ளவரை ஆதிக்க வெறி பிடித்த சக்திகள் இந்த நாட்டை பீடித்திருக்கும். உணர்ச்சியை தூண்டும் வீறு கொண்ட பேச்சு, முதலில் உங்களை மாற்ற பயன்படுமா என்று பாருங்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்பது உண்மைதான். ஆனால், இந்த பழமொழியை பின்பற்றி ஒரு திருடனை பிடிக்க மற்றொரு திருடனை பணிப்பது அறிவுடமையாகாது. திருடனை பற்றி இன்னொரு திருடனுக்கு தான் நன்றாக தெரியும் என்று நாம் நம்ப தொடங்கி விட்டால், திருட்டு பின்னணி கொண்டவர்களுக்கே காவல் துறையில் முன்னுரிமை என்று கருதுவது போல் அனர்த்தமாகிவிடும். "கருணாநிதி ஊழல் பேர்வழி என்பதற்காக மற்றொரு ஊழல் பேர்வழி தான் சிறந்த மாற்று" என்ற உங்களது கருத்தை அறிவுலகம் ஏற்காது சம்பத்.
 
THIRUMALAISAMY - coimbatore,இந்தியா
2011-03-09 23:43:32 IST Report Abuse
நீங்கள் சொன்னது மிகவும் சிறந்த கருத்து. ஆனால் சம்பத் இதை படித்தால் மட்டுமே அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். அதை விடுங்கள் தம்பி. புது கட்சி என்று புறப்பட்ட புரட்சி கலைஞர் மக்களோடு மட்டும் கூட்டணி என்று மார் தட்டியவர் அம்மாவின் காலில் ஏன் போய் அஷ்டாங்கமாய் விழுந்து விட்டார். கொமு க ஏன் போய் தி மு க விடம் சேர்ந்தது ? வேறு வழி இல்லை கட்சியை காப்பாற்ற முடியாது ?. தமிழ் நாட்டின் தலை எழுத்தே அதி முக அல்லது தி மு க மட்டும் தான் ஆளவேண்டும். அவர்களுக்குள் இது அண்ணா போட்டு கொடுத்த ரகசிய உடன்பாடு இன்று வரை தொடர்கிறது. இது யாராலும் மாற்றி எழுத முடியாத மந்திரம். இவர்கள் இரண்டு பேர் கூட மட்டும் தான் கூட்டணி போட வேண்டும். மூன்றாவது அணி என்று புறப்பட்டால் முறியடித்து விடுவார்கள். இல்லை விலைக்கு வாங்கி விடுமளவுக்கு பணபலம் ஆள்பலம் அவர்களிடம் உள்ளது. ஒரு சாமான்யன் சட்ட சபைக்கு போகமுடியாது. அப்படி மீறி போனாலும் அவனையும் விலை பேசி விடுவார்கள். இல்லை கொலை செய்து விடுவார்கள். ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கேட்கிறது. ஒரு வேலை காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெற்று தி மு க குறைந்த சீட் பெற்று ஆட்சியில் பங்கு கேட்டால் தி மு க எம் எல் ஏ க்கள் அ தி மு க பக்கம் சென்று ஆட்சி அமைக்க சென்று விடுவார்கள் . தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்ற எதாவது ஒரு நல்ல இயக்கம ஒழுக்கமான நெறிமுறைகளை கொண்ட இயக்கம் ஜனநாயக இயக்கம் வளரவேண்டும். அல்லது இருக்கிற இயக்கம் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்? அது நடக்குமா ? மக்களே மதுவுக்கு அடிமையாகி கொண்டு இருக்கிறார்கள் . ஏமாற்றவும் திருடவும் நாம் மட்டும் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி கொண்டு வருகிறது. மக்கள் மனம் மாற வேண்டும். மக்கள் எவ்வழி நாடும் அவ்வழி . மக்கள் மன நிலையை பொறுத்தே ஆட்சி அமையும். இலவசத்தை கொடுக்கிறார்கள் நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்கிறீர்கள். பணம் கொடுக்கிறார்கள். ஏன் வாங்கிகொள்கிறீர்கள். மாற வேண்டியது ஆட்சி அல்ல, ஆட்சியாளர்களும் அல்ல மக்களே நீங்கள் தான். தனிப்பட்ட திறமை கொண்ட தன்னிகரில்லா தலைவர் கலைஞர் உழைப்பு என்றால் அதன் பெயர் கருணாநிதி, துணிச்சலும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர் அன்னை ஜெயலலிதா. மற்ற இயக்கங்கள் ஏன் வளரவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்த இரண்டு இயக்கங்களிடமும் உள்ளது. மக்களே உங்களிடம் என்ன உள்ளது ?...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக