புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தோர்ருக்கு பிரஜாவுரிமை கிடையாது. கனடா
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாக காணப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். இந்நிவையில் கனடிய அரசாங்கம் புலிகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுடன் இலங்கையிலிருந்து தஞ்சம்கோருவோர் மற்றும் புலிகளுடன் தொடர்புகளை பேணுவோர், மற்றும் புலிகளின் செயற்பாடுகளுக்கு உதவுவோர் மீது நடவடிக்கைளை மேற்கொள்ளும் பொருட்டு கடினமான சட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்துடன் கனடாவில் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கும் தழிழர்களின் கடந்தகாலச் செயற்பாடுகள் மிகவும் பரிசீலிக்கப்படும் எனவும் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களுக்கு பிரஜாவுரிமைகள் வழங்கப்படமாட்டாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக