ஞாயிறு, 5 டிசம்பர், 2010

கலைத்துறையை கலங்கடிக்கும் குரு பெயர்ச்சி.இது குறித்து, ஜோதிடர்கள்

தற்போதைய குரு பெயர்ச்சியால், அரசியல், ஆன்மிகம், கல்வி மட்டுமின்றி கலைத்துறையும் கடுமையாக பாதிக்கும் என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி, ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு - கேது பெயர்ச்சி, ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் குரு பெயர்ச்சி ஆகியன ஜோதிடத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.
கோசார ரீதியாக நடைபெறும் இத்தகைய பெயர்ச்சிகள் தான் பல்வேறு விஷயங்களை தீர்மானிக்கின்றன என ஜோதிடர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, நவ., 21லும் குரு பெயர்ச்சி நடந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி டிச., 6ல் குரு பெயர்ச்சி நடைபெறுகிறது.இதன் மூலம், அரசியல், கலை, ஆன்மிகம், நீதித்துறை, கல்வி, விவசாயம், செய்தி சேவை, கணக்கு - வழக்குகள், நிதி என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இதில், கெடுதியான பாதிப்புகள் அதிகம் ஏற்படும் துறைகளில் கலைத்துறையும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இது குறித்து, ஜோதிடர்கள் ஆற்காடு சோமசேகரன், விழுப்புரம் சிவகுரு ரவி, மதுரை முத்துக்குமார், புவனகிரி சிவஅண்ணாமலை தேசிகன் ஆகியோர் கூறியதாவது:கிரக பெயர்ச்சி ஆகும் நேரத்தையும், குரு இப்போது இருக்கும் ஸ்தானத்தையும் பொருத்து பலன்களை சொல்லலாம். மேலும் குருவின் பார்வை படும் இடங்கள்; குருவை பார்க்கும் கிரகங்கள்; குருவுடன் சேர்க்கை கிரகங்கள் அவற்றின் வீடுகள்; அவற்றின் பார்வைகள் ஆகியவற்றை வைத்து குரு பெயர்ச்சி பலன்களை துல்லியமாக கணிக்க முடியும்.ராசி கட்டத்தில், 12ம் வீடாக இருக்கும் மீன ராசியில், தனது சுய வீட்டில் குரு தற்போது இருக்கிறார். அவரை சனி பார்க்கிறார். அதோடு தற்போது சூரியன், கேது உள்ள வீடுகளையும் சனி பார்க்கிறார். 12ம் வீடு மறைவு ஸ்தானம் என்பதால், மறைவாக இருக்கும் பொருட்கள் வெளிப்படும். அதாவது கருப்பு பணம், மர்மங்கள், ஊழல்கள், மோசடிகள், திரை மறைவு வேலைகள் ஆகியன வெளிப்படும்.

குறிப்பாக திரைத்துறையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிக்கல் தான்.திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் போலீஸ், வழக்கு என சிக்குவர்; கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், வருமான வரி குறித்த வழக்குகளில் சிக்க நேரிடும்; தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி முக்கிய திரையுலக பிரமுகர்கள் அல்லல்பட நேரிடும்; தற்கொலை - துர்மரணம் போன்றவற்றிற்கும் வாய்ப்பு உண்டு.போலீசாரும், வக்கீல்களும் ஒற்றுமையுடன் செயல்படுவர். பல வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் பொதுமக்களின் வரவேற்பை பெறும். மாநிலத்திலும், மத்தியிலும் அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். கோவில்களில் வழிபாடு பாதிக்கும்; அங்கு நடைபெறும் ஊழல்கள் வெளி வரும்; கல்வித்துறையில், தேர்வு ரத்து, ஆசிரியர்கள் ஸ்டிரைக் போன்ற பிரச்னைகள் எழலாம்.

மழை வெள்ள பாதிப்பு அதிகம் இருக்கும்; விவசாயம் செழிக்கும்; அரசின் நிதி ஆதாரம் பெருகும் வகையில், வெளியில் முடங்கி கிடக்கும் நிதி மீளும்; ஊடகங்கள், செய்தி சேவைகளில் பாதிப்பு இருக்கும்; ஆடிட்டிங் துறையும் சர்ச்சையில் சிக்கும். இது போன்ற நிலைகள் வரும் மே மாதம் வரை நீடிக்கும். அதன் பிறகு மொத்தத்தில், தவறு செய்பவர்களுக்கு பாரபட்சமற்ற தண்டனையும், நேர்மையாளர்களுக்கு நன்மையும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதன் எதிரொலியாகவே, கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விவகாரங்களில் தற்போது சிக்கியுள்ளனர் என்ற கருத்து சினிமா வட்டாரத்திலும் நிலவுகிறது. நடிகர் விஜய் நடித்த சினிமாவை திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். வெளிநாட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா பேசியதற்கு எதிராக, "பெப்சி' கண்டனக் குரல் எழுப்பியுள்ளது.நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தன் குடும்பத்துக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளதோடு, பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை சரண்யா விவகாரம், சினிமா கதை திருட்டு வழக்கு, இயக்குனர் மிஷ்கின் அளித்த பேட்டிக்கு எதிராக, உதவி இயக்குனர்கள் போராட்டக் களத்துக்கு வந்தது என பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது
திரை துரை - abudhabikeelatherukolisangamroad,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-05 09:13:27 IST
ஒவொரு ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு கலை துறை மட்டும் இதில் விதி விளக்கா?நாம் செய்த நன்மை தீமை தான் நாளை நம் மானம் மருவாதை எல்லாம் எடுத்து வெளி உலகுக்கு காண்பிக்கும்...காசுக்கஹா டாம்பீக வாழ்விற்காக எதையும் செய்ய துணிந்தால் இது தான் விளைவு..திரை துறை என்ன நாட்டின் விடிவெள்ளியா?அப்படி இருக்க யாரும் அது போல உண்மையாக வெளிப்படையாக சுயநலம் மற்றும் எதையும் செய்யும் மனம் இல்லாமல் உண்மை உழைப்பு என்கிற நல் வாழ்வையும் உழைப்பையும் உறுதியாக காமிக்கவில்லையே?போங்கடா நீங்களும் உங்க துறையும்.........
செல்வா - கேன்மரே,யூ.எஸ்.ஏ
2010-12-05 09:02:16 IST
மக்களை சிந்திக்க விடாமல், குழப்பி காசு பண்ணும் இந்த கன்றாவி ஜோதிடர்கள் இருக்கும்வரை இந்தியா உருப்படாது. இந்திய மக்களின் சிந்தனையே குழம்பிய குட்டைமாதிரிதான். நிறைய படித்தவர்கல்கூட, சுய சிந்தனை, முடிவு இல்லாமல் ஊனமாக இப்படி ஜோதிடர்கள் பின்னால் போகிறார்கள்....
சில்லு வண்டு - துபாய்,இந்தியா
2010-12-05 08:22:20 IST
இந்த ஜோதிடர் பய புள்ளைகளுக்கு வேற வேலை கிடையாது;;;;நாம் நல்ல இருப்போம் என்று சொல்லி நம்மளிடம் பணத்தை புடுங்கி தின்னு புடுவானுகள்;;;ஆனால் அவனுகளை பாருங்கள்;;;;அவன் நல்ல நேரத்தை பார்க்க முடியாமல்,பிட்ச்சைக்காரத்தனமாக் நாட்டில் இப்படி சொல்லிக் கொண்டு திருகிராணுக;;;;...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக