என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், தீயில் விழுந்து கூட உத்தமியாக நிரூபிக்கட்டும்: வனிதா ஆவேசம்
என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், தீயில் விழுந்து கூட உத்தமியாக நிரூபிக்கட்டும் என, நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மகள் வனிதா ஆவேசமாக கூறினார்.
நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. தங்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து நடிகை வனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வனிதா,
நடிகைகள் விபசாரம் செய்கின்றனர் என பத்திரிகைகளில் செய்தி வந்ததற்கு விஜயகுமார் குதித்தார். அப்படி குதிக்க அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. அவர் அந்த தவறை செய்யவில்லை என்றால், உண்மை என்ன என்பதை நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்தபோது, சொந்தமாக, "கை கொடுக்கும் கை, நெஞ்சங்கள்' என, இரண்டு படங்களை விஜயகுமார் தயாரித்தார்.
இரண்டும், "பிளாப்' ஆகிவிட்டது. குடும்பத்துடன் அமெரிக்கா போய் விட்டோம். அமெரிக்காவில் 1986ம் ஆண்டு நாங்கள் லாஸ் ஏஞ்சல்சில் இருந்த போது, அருண் விஜயின் அக்கா கவிதாவை வேறு மாதிரி பயன்படுத்தினர். என் அப்பாவின் மேனேஜர் குமாரின் தம்பி சாந்தகுமாரை கவிதா காதலித்தார். இது என் தந்தைக்கு பிடிக்கவில்லை. சாந்தகுமார் ஒரு நாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டு விட்டது. அவர் எப்படி இறந்தார் என்று விஜயகுமாரை கேளுங்கள் தெரியும் என்றார்.
16 வயதில் வீட்டை விட்டு ஓடிப் போனதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த வனிதா,
எங்கள் வீட்டில் நிறைய விஷயங்கள் நடந்தன. என் அம்மா செய்யச் சொன்ன விஷயங்கள் எதையும் நான் செய்யவில்லை. அப்போது, 18 வயதுக்குப் பின் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற விஷயம் கூட எனக்குத் தெரியாது. அவர்கள் தொல்லை பொறுக்க முடியாமல் தான் வீட்டை விட்டு வெளியேறினேன். என் தோழியின் வீட்டில் தங்கியிருந்தேன். என்னை அங்கிருந்து அழைத்து வந்து, வீட்டில் அடைத்து வைத்து அடித்தனர்.
காதல் திருமணம் செய்து கொள்ளவும் நினைத்தேன். டீன் ஏஜ் என்பதால் என் விருப்பத்திற்கு எதையும் செய்து கொள்ள முடியவில்லை. என் மூலம் எந்தெந்த வகையில் வருமானம் வரும் என்று தான் என் அப்பா பார்த்தார். சின்ன தொகை கொடுத்தாலும் போதும் என்று என்னை நடிக்க வைத்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்கவே நான் திருமணம் செய்து கொண்டேன்.
என் அம்மாவை விஜயகுமார் இரண்டாவதாக, சட்ட விரோதமாக திருமணம் செய்து விட்டு, எங்கள் வீட்டில் அடிச்ச கூத்து எங்களை மிகவும் பாதித்தது. என் வீட்டில் நடக்கும் விஷயங்களை நான் ஒருத்தி தான் தைரியமாக எதிர்த்து கேட்பேன். அதனால், என்னை யாருக்கும் பிடிக்காது. நான் நல்ல பெண்ணாக இருந்ததால், அவர்கள் சொல்வதற்கு, முடியாது என, அழுத்தமாக பதில் சொன்னேன். அதனால் பிரச்னையும் அதிகமாகிவிட்டது. என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், சீதா தேவியாக இருந்தால், தீயில் விழுந்து கூட தன்னை உத்தமியாக நிரூபிக்கட்டும் என்றார்.
என் முதல் கணவர் ஆகாஷுக்கு பிறந்த முதல் மகன் விஜய் ஸ்ரீஹரியை, என் தந்தை விஜயகுமார் வீட்டில் இருந்து, அழைத்து வருவது குறித்து, கடந்த மாதம் 7ம் தேதி, எங்களுக்குள் சண்டை வந்தது. அதன் பின், தனியார் மருத்துவமனையில் இருந்து போலீஸ் உதவியுடன் என் மகனை அழைத்து வந்தேன். என் குழந்தையை, மருத்துவமனையில் இருந்து தூக்கி வந்துவிட்டதாக கூறியுள்ளனர். குழந்தையை கொண்டு வர தாய், தந்தைக்கு உரிமை உண்டு. என் தந்தை, என் குழந்தைக்கு தவறான பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர். அதனால் தான், அவர்களிடம் இருந்து என் மகனை அழைத்து வர விரும்பினேன்.
என்னைப் பற்றி பேச அப்பாவுக்கு எந்த அருகதையும் இல்லை. என்னைப் பற்றி குறை சொன்னால் நாக்கு அழுகிடும். எங்கள் வீட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து, வாழ்க்கை வெறுத்துப் போய் ஏழு வயதிலேயே தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். பின், 16 வயதில் வீட்டை விட்டு ஓடினேன்.
ஆகாஷுடன் நடந்த திருமணம் தவறானது என்று கூற மாட்டேன். திருமணம் விவாகரத்து பெற்றதையும் தவறென்று நினைக்கவில்லை. ஒரு பெண் 25 வயதில் தனியாக இருக்க முடியாது. அதனால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். அப்பா தற்போதுள்ள வீட்டில் என்னென்ன நடக்கிறது என்று எனக்கு எல்லாம் தெரியும். அது பாவப்பட்ட வீடு; பல விஷயங்களை செய்கின்றனர். அந்த வீடு எனக்கு தேவையில்லை. என் அம்மா எல்லாவற்றின் மீதும் ஆசைப்படுவார். இதைப் பார்த்த ஒரு பெரிய இயக்குனர், உன் அம்மா இறந்தால் அவரது அனைத்து உடைமைகளையும் அவர் கூடவே வைத்து, மம்மி மாதிரி புதைத்து விட வேண்டும். அப்போது தான் அவரது ஆத்மா சாந்தியடையும் என்றார். அந்த பெரிய இயக்குனரின் பேரை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக