சனி, 4 டிசம்பர், 2010

அம்மா மஞ்சுளா மதுவுக்கு அடிமை - வனிதா; விஜயகுமார் வீடு பாவப்பட்ட வீடு - வனிதா கணவர்

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வனிதா,

எனது அம்மா மஞ்சுளா இப்போது சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். அவரை மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிட்டனர். இப்போது அம்மாவுக்கு ஒரு கிரவுண்ட் நிலம்தான் உள்ளது. அம்மாவை மதுவுக்கு அடிமையாக்கி அவரது சொத்துக்களை அப்பா பறித்துள்ளார். அத்தனை சொத்துக்களும் அருண்விஜய் பெயரில் உள்ளது.

1986ல் அப்பா சொந்தமாக இரண்டு படங்கள் எடுத்து நஷ்டமடைந்தார். அதன்பிறகு படம் எதுவும் வரவில்லை. எனது அம்மாவுக்கும் அப்போது போதிய படங்கள் இல்லாததால் வருமானம் குறைந்தது. பின்னர் முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா அம்மா சென்றார். அங்கு 
ஒரு டாக்டருடன் அம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த டாக்டர் உதவியுடன் ஹோட்டல் ஒன்றை திறந்தனர். அந்த ஹோட்டலில், அப்பாவிடம் மேனேஜராக இருந்த குமாரின் தம்பி சாந்தக்குமாரை வேலைக்கு சேர்த்தனர்.

ஹோட்டலில் வருமானம் நன்றாக வருகிறது என்றவுடன், அப்பாவுடன் நாங்கள் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றோம். அங்கு என்னோட சகோதரி கவிதாவுக்கும், ஹோட்டலில் வேலை பார்த்த சாந்தகுமாருக்கும் காதல் ஏற்பட்டது. அப்போது கவிதாவை மிஸ்யூஸ் பண்ணினார்கள். இதனால் கவிதாவின் காதல் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் சாந்தகுமார் தீ விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டும் வந்தது. ஆனால் அவர் எரிக்கப்பட்டார். பின்னர் சென்னை திரும்பியதும், நடிகர் எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரியின் உதவியுடன் கவிதாவுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர்.

ஸ்ரீதேவியை 2 வயதிலேயே நடிக்க வைத்துவிட்டனர். ஸ்ரீதேவியை படிக்க வைக்கவில்லை. ஸ்ரீதேவிவுக்கு எதிர்பார்த்ததுபோல படங்களிலும் வாய்ப்பு வரவில்லை. ஆகையால் அவருக்கு திருமணம் செய்ய படாத பாடுபட்டார்கள்.

அவர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. பிள்ளைகளின் சந்தோஷம், விருப்பம், வாழ்க்கை போன்றவைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. படம் படம் என அம்மா பிஸியாக இருந்தார்.

எங்களை படிக்க வைக்காத அப்பா, எப்படி என் மகன் ஸ்ரீஹரியை படிக்க வைப்பார். ஸ்ரீஹரியை சினிமாவில் நடிக்க வைத்து பணம் ஈட்ட அப்பா முயற்சி செய்கிறார். ஸ்ரீஹரி திறமையானவன். அவனை இழக்க நாங்கள் விரும்பவில்லை. சினிமாத்துறையில் நாளைய கமலஹாசனாக ஹரிகரன் வருவான் என்றார்.

உங்கள் அப்பா இருக்கும் வீட்டை நீங்கள் பறிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் அளித்த வனிதா,

அப்பா தற்போது இருக்கும் வீட்டை நான் பறிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டுகிறார். அந்த வீட்டில் என்ன நடந்தது என்பதை நான் சின்ன வயதில் இருந்தே பார்த்தவள். அங்கு நடக்க கூடாது எல்லாம் நடந்தது. அந்த வீட்டில் நான் பார்த்ததை என் மகன் பார்க்கக் கூடாது. நீதி கிடைக்கும் வரை போராடப்போகிறேன் என்றார்.

வனிதா கணவர் ஆனந்தராஜ் கூறுகையில், விஜயகுமார் வீடு பாவப்பட்ட வீடு. ஹரிக்கும் பிள்ளைகள் இருக்கிறது. அந்த வீட்டில் தனது பிள்ளைகளை ஹரி தங்க வைப்பாரா? என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக