சனி, 4 டிசம்பர், 2010

அவமானம் பிரிட்டிஷ் அரசுக்குத்தான்

மகிந்தா நாடு திரும்பி விட்டார். பிரிட்டனுக்கு அவர் வரமாட்டார் பயத்தில் இலங்கையை விட்டு போகமாட்டார் என எழுதிதள்ளிய புலி ஊடகங்கள் அவர் பிரிட்டனில் கைது செய்யப்படவில்லை என்றவுடன் அவரது உரையை நடத்த விடாமல் பண்ணி விட்டோமே வெற்றி எங்களுக்கு என்கிற பாணியில் எழுதித்தள்ளுகின்றன.
புலம்பெயர்நாடுகளில் அதிகமான விசர்ப்புலிகள் உள்ள நாடு எது என்றால் அது பிரிட்டனில்தான். குறிப்பாக லண்டனில் உள்ள புலி ஆதரவாளர்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. புலிகளின் நிகழ்ச்சிகளுக்கு தமிழ்மக்களை அழைக்கின்ற பாணியே தமிழ்ப்பட வில்லன்களின் அடியாட்கள் கட்டாயம் வரவேணும் என்ன என மக்களை பலவந்தமாக மிரட்டுகின்றமாதியிருக்கும். புலிகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு போகாவிட்டால் இந்த மொக்கன்கள் ஏதும் செய்துவிடுவாங்கள் என்கிற பயத்தில் போகிற தமிழ் மக்கள் அதிகமாக லண்டனில் இருக்கிறார்கள். மாவீரர் தினத்திற்கு இப்படித்தான் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஒக்ஸ்போhட் பல்கலைக்கழகத்தில் மகிந்த உரை நிகழ்த்த வருவார் என்கிற செய்தி வெளியானவுடன் இந்த புலிகள் பகிரங்கமாக தெரிவித்த விடயம் என்னவெனில் இவர் வரட்டும் வந்தால் கைது செய்யப்படுவார் என்பதுதான். மகிந்த பயத்தில் இருக்கிறார் என செய்தி கூட வெளியிட்டார். முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நாமம் போட்ட ராஜபக்ஷ நான் இதற்கெல்லாம் பயப்படுகிற ஆளில்லை என லண்டனுக்கு வந்து இறங்க  புலிகள் ஹீத்ரோ எயாப்போர்டில் புலிக்கொடியுடன் நுழைவாயிலில் போய் நின்று வழக்கமான காவடி ஆடினார்கள். ஆனால் மகிந்த விஐபிக்கள் செல்லுகின்ற வழியால் ஹொட்டேலுக்கு போய் சேர்ந்து விட்டார். அட இந்தாள் வந்து விட்டானே உரை நிகழ்த்த விடமாட்டோம் என ஆர்ப்பார்ட்டத்தில் இறங்கப்போவதாக தெரிவிக்க ஒக்ஸ்போhட் பல்கலைகழகம் பாதுகாப்பு காரணம் கருதி  உரையை ரத்து செய்து விட்டது.
மகிந்தாவும் சரியென்று நாட்டுக்கு திரும்பி விட்டார். ரிவியில் ஒலிபரப்பாகும் ரிம் ஜெர்ரி எலி பூனை விளையாட்டு நிகழ்ச்சியைப்பார்த்த மாதிரி இருந்தது  மேற்படி சம்பவங்கள்.
இதில் அவமானம் யாருக்கு பிரிட்டிஷ் அரசுக்குத்தான். லண்டனில் உள்ள விசர்ப்புலிகளுக்கு பயந்து ஒரு நாட்டின் ஜனாதிபதியின் உரையை ரத்து செய்து இருக்கிறது. புலியை கொண்றோல் பண்ண முடியாத பிரிட்டிஷ் அரசு நிகழ்ச்சி ரத்தானதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என வடிவேலு பாணியில் ரூம்போட்டு இருந்து யோசித்து முடிவடுத்து அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக