புதன், 24 நவம்பர், 2010

V.C.Kuhanathan:கேரள விழாவில் தமிழர்களை இழிவுபடுத்திய முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் முன்னணி நடிகர் ஒருவர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் இழிவு படுத்தி பேசியதாக கூறி அந்த நடிகருக்கு வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
குரு ராஜேந்திரா மூவிஸ் சார்பில், டைரக்டர் வி.எஸ்.கருணாகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகி வரும் புதிய படம் உங்கள் விருப்பம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கலந்து கொண்டு இசையை வெளியீட்டு பேசினார். அவர் பேசுகையில், நேற்று நான் மலையாள தொலைக்காட்சி சேனல் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழ் சினிமா முன்னணி நாயகன் ஒருவர் கலந்து கொண்டு மேடையில் பேசினார். தான் மலையாள சினிமாவில் நடிக்க விரும்புவதாக கூறிய அந்த நடிகர், மலையாள சினிமாவில் நடிக்க நிறைய திறமைகள் வேண்டும்; நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் சினிமாவுக்கு அது தேவையில்லை; நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். மலையாளத்தில் சின்ன கேரக்டராக இருந்தாலும் சொல்லுங்கள். வந்து நடித்துக் கொடுக்கிறேன், என்று பேசி தமிழ் சினிமாவை கொச்சைப்படுத்தினார். அதோடு, அந்த விழாவில் திரண்டு வந்திருந்த ரசிகர்களை பாராட்டிய அந்த நடிகர், தமிழகத்தில் இதுபோல கூட்டத்தை பார்த்ததில்லை என்றும் கூறி தமிழர்களை கொச்சைப்படுத்தினார். அவரது இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த படத்தில்கூட வெளிமாநிலத்தவர்கள் இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து தமிழனை இழிவு படுத்தாதீர்கள். இனிமேலும் யாராவது இதுபோல பேசினால் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம், என்று ஆவேசமாக கூறினார்.
வி.சி.குகநாதன் ‌கடைசி வரை அந்த நடிகரின் பெயரை மேடையில் சொல்லவில்லை. முன்னணி நடிகர் என்று சொன்னதால் யார் அந்த மலையாள விசுவாசி என்று தெரிந்து கொள்ள மேடையில் இருந்தவர்களும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சினிமா பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் வி.சி.குகநாதன் பெயரை சொல்ல மறுத்து விட்டார். பின்னர் விசாரிக்கையில் அந்த நடிகர் ஆர்யா என தெரியவந்தது. மதராசபட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் ஆர்யா, கேரளாவை சேர்ந்தவர் என்பது கூடுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக