கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிய வருகின்றது.
கடந்த கால யுத்தத்தின்போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவார்கள் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வட மாகாண தமிழர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்து வந்த கும்பல் ஒன்றுடன் இவருக்கு தொடர்பு இருக்கின்றது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியில் இருப்பவர் என்று கூறப்படும் ஒருவரே இம்மோசடியின் பிரதான சூத்திரதாரி என்றும் இச்சூத்திரதாரியின் தொலைபேசி இலக்கங்களை மக்களுக்கு கூட்டமைப்பு எம்.பி வழங்கி இருக்கின்றார் என்றும் பொலிஸார் கண்டு பிடித்து உள்ளனர்.
காணாமல் போய் இருக்கும் ஒருவருடைய உறவினர் ஒருவர் மேஜர் ஜெனரல் என்று கூறப்படுபவருடன் அத்தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மூன்று இலட்சம் ரூபாய் வரை கொடுத்து இருக்கின்றார்.
இன்னொருவர் எழுபத்தைந்து ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து இருக்கின்றார். வாகன தகடு இலக்கம் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்கள் இப்பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
ஆனால் மேஜர் ஜெனரல் என்று கூறப்படும் அந்நபரின் தொலைபேசி இலக்கம் பின்னர் செயல் இழந்து விட்டது. இந்நிலை பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிஸுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விசாரணைக்காக எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று வவுனியா மற்றும் மன்னாருக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக