வெள்ளி, 5 நவம்பர், 2010

புலி ஆதரவாளர்களைக்கூட வெட்கப்பட அல்லது மீள்சிந்தனைக்கு உட்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன் Teavadai

சபாஷ் வரதராஜப்பெருமாள்
ரி.பி.சி வானொலியில் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது வந்து அரசியல் கலந்துரையாடல் செய்வதுண்டு. அவை ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரமாக இருக்கும். சரியான விளக்கங்கள் தரமுடியாது போனவர்களும் உண்டு. அதற்கு காரணம் வானொலியில் வந்து கேள்வி என்பது என்னவென்று தெரியாமல் கேட்கும் நேயர்களும் முக்கிய காரணம். கேள்வி கேட்க வருபவர் ஏதேதோ உளறி ஒரு விசர்க்கேள்வியை கேட்டுட்டுப்போவார் வானொலி இயக்குனர் சுருக்கமாக உங்கள் கேள்வியை கேளுங்கள் என்று சொன்னாலும் அதை விளங்கிக்கொள்ளாமல் ஒரு சிறிய கேள்விக்கு ஒரு பிரசங்கம்ஆ வைத்துவிட்டு இதுதான் என் கேள்வி என்று சொல்லி விட்டுப்போவார்கள். அரசியல்வாதியும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையெல்லாம் சொல்லி விட்டுப்போவார்கள். அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இப்படி நொந்த நிகழ்ச்சியாக மாறிப்போய் விடும்.
நீண்ட நாட்களுக்குப்பின் நேற்று 04.11.10 அன்றிரவு வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வழக்கம்போல் கேள்விகள் அமைந்திருந்தாலும் அவர் கொடுத்த விளக்கம் மிக நன்றாக இருந்தது. புலிகள் தொடர்பாக அவர் கொடுத்திருந்த விளக்கம் புலி ஆதரவாளர்களைக்கூட வெட்கப்பட அல்லது மீள்சிந்தனைக்கு உட்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். அரசியல் நாகரீகம் என்பது என்ன என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. புலிகளை விமர்சனக்குட்படுத்தியருந்தாலும் நாகரீகமாக அதனைச் செய்திருந்தார். அதற்காக ரீ வடையின் வாழ்த்துக்கள் அவருக்கு.
தமிழ்மக்களை அரசியல்மயப்படுத்துவதற்கு பதிலாக தமிழ்த்தேசியக் கட்சிகள் முதற்கொண்டு புலிகள் வரை அவர்களுக்கு உருவேற்றி உருவேற்றி அவர்களது சிந்தனைகளை மழுங்கடித்து விட்டன. துருப்பிடித்துக் கிடக்கின்ற தமிழ்மக்களின் சிந்தனைகளை புதுப்பித்து புதிய பாதையில் பயணிக்கின்ற பயணத்தை வரதராஜப்பெருமாள் போன்ற அரசியல் ஞானிகள் அதனை மேற்கொள்ள வேண்டும்.  வானொலி மட்டுமல்ல பத்திரிகைகள், இணையத்தளங்கள் எல்லாவற்றிலும் இவர்களின் கருத்துக்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்க வேண்டும். அதற்காக கொமண்ட்ஸ் என்கிற பெயரில் கருத்துக்களை மழுங்கடிக்கின்ற வேலைகளை தவிர்த்து விட்டு  நல்லதொரு கருத்துப்பரிமாற்றம் இடம்பெற வேண்டும்.
வரதராஜப்பெருமாள் அவர்களின் ஐரோப்பிய பயணம் கலந்துகொண்ட கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் பயனுள்ளவை. புதியதொரு பாதைக்கு பயணிக்க வேண்டிய தேவையை புலம்பெயர்ந்த மக்களுக்கு இட்டுச் செல்ல வழிவகுத்திருக்கிறது.
வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக