செவ்வாய், 2 நவம்பர், 2010

Tamil Films தீபாவளி 2010 - வெடிக்கிற வெடி எது?



         ந்த வருட தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது. எந்திரன் கொண்டாட்டங்கள் இன்னும் முடியாத நிலையில்! வெளிவர வேண்டிய படங்களும் தியேட்டர் கிடைக்காமல் தள்ளிப் போய்விட்டது. டிரெய்லர், பாடல்கள், உருவான கதை என பில்டப் வளர்ந்துகொண்டே போகும் நிலையில் தன் மருமகன் தனுஷுக்கு மட்டும் வழிவிட்டிருக்கிறார் ரோபோ. 

பொதுவாகவே தீபாவளி சமயத்தில் தியேட்டர்கள் அத்தனையும் பட்டாசுக் கொண்டாட்டமாய் நிறைந்து இருக்கும். ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா ,விக்ரம் என பெரிய ஹீரோக்கள் அத்தனைபேரும் ரசிகர்களின் பட்டாசுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார்கள். இருந்தாலும் வருகிற நான்கு படங்களும் ஒவ்வொரு வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய படங்கள் தான். 

உத்தமபுத்திரன்
 
தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகி கலெக்‌ஷனை அள்ளிய படமான தெலுங்கு ‘ரெடி’ யின் ரீமேக் உத்தமபுத்திரன். இயக்குனர் ஜவஹர் மித்ரனுடன் தனுஷ் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.



காதல் கலந்த குடும்பச் சித்திரம் உத்தமபுத்திரன். படிக்காதவன் படத்திற்கு பிறகு விவேக் தனுஷ் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். படத்தில் ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். பாக்கியராஜ், அம்பிகா, ரேகா என எல்லாருமே பெரிய ஆர்டிஸ்ட். ஜெனிலியாவுக்கு நீண்ட நாள் கழித்து தமிழில் ஒரு படம் வருகிறது.  

மைனா

அடுத்து அதிகம் பேசப்படுகிற படம் பிரபு சாலமன் இயக்கி இருக்கும் மைனா. இதன் இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசனும் இயக்குனர் பாலாவும் படத்தைப் பார்த்திருந்த நிலையில் பிரபு சாலமனையும் படக்குழுவையும் ஏகத்துக்கும் பாராட்டினார்கள்.

 

பொதுவாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாத பாலா மைனா விழாவுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல், இந்தப் படத்தில் எல்லாரும் புதுமுக நடிகர்களாய் இருந்தாலும் கூட அவர்களும் நூறு படங்கள் நடித்த அனுபவத்தைக் கண்டேன் என்றார். 

இப்போது படம் பார்த்த திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் இத்தனை வருட சினிமாவில் இது போன்ற க்ளைமாக்ஸ் காட்சியை யாருமே பார்த்திருக்க முடியாது என பாராட்டுகிறார்கள்.   

வ குவாட்டர் கட்டிங்
 
இந்தப் படத்தைப் பற்றி பேசிவரும் அதன் ஹீரோ சிவா, தயவு செய்து ரொம்ப எதிர்பார்த்து வந்துடாதீங்க பாஸ். எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தால் படம் நல்லா இருக்கும். படத்தில் காமெடி இருக்கு ஆனால் படம் முழுக்க காமெடி இல்லை. வேறு விஷயங்களும் படத்தில் இருக்கும். குவாட்டர் என்பதால் இது பெண்கள் பார்க்க முடியாத படமாக இருக்காது. குட்டீஸ் முதல் எல்லாருமே என்ஜாய் பண்ணலாம் என்று சொல்கிறார்.



டிரைலரே இவ்வளவு காமெடியா இருக்கே! அப்போ படம் செம ஜாலியா இருக்கும் என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஹீரோ சிவாவின் பெயர் சுறா.  கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரும் சுறாவிற்கு சௌதி அரேபியாவில் வேலை கிடைக்கிறது. சுறா விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத் தக்கது. கேட்டவே காமெடியா இருக்குல்ல!    

வல்லக் கோட்டை
 
தமிழ் திரையில் மினிமம் கேரண்ட்டி ஹீரோக்களில் ஒருவர் அர்ஜுன். ஹிட்டோ இல்லையோ அர்ஜுன் படம் வந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் இப்போது வல்லக் கோட்டை. கதையே இல்லாமல் படம் இயக்குவதில் இயக்குனர் ஏ.வெங்கடேஷுக்கு அப்படி ஒரு திறமை.



ஆல்ரெடி அர்ஜுனுடன் வாத்தியார், துறை என இரண்டு படங்கள், அபாரமான வெற்றி இல்லை என்றாலும் 'இது போதும் பா...' என்று சொல்லும் அளவிற்கு சுமாரான வெற்றி. இயக்குனர் ஏ.வெங்கடேஷுக்கு இது இந்த வருடத்தின் மூன்றாவது படம். 

இது இல்லாமல் ஹாலிவுட்டின் 'ஸ்ட்ரீட் டான்சர்ஸ்' படம் தமிழில் வெளியாகிறது. நடன விரும்பிகளுக்கு இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடனத்தில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று போராடும் ஒரு பெண்ணின் கதை. அந்த பெண்ணின் காதலும் படத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.  

வெடிக்கிற வெடி எது? இன்னும் விரைவில் தெரியவரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக