தென்கொரியாவுக்கு சொந்தமான தீவுப் பகுதி மீது வடகொரியா பீரங்கி மற்றுமு; ஆட்டிலறி குண்டு தாக்குதலை நடாத்தியதில் இரு தென்கொரிய கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 50பேர் வரையில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் படையினரும், பொதுமக்களும் அடங்குவர். பல வீடுகளும் தீப்பற்றி எரிந்துள்ளன.
இந்த தாக்குதலை வடகொரியா முதலில் ஆரம்பித்ததாக தென்கொரியா கூறுகின்றது. அந்தப் பகுதியில் போர் ஒத்திகை நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டதாகவும் வடகொரியா மீது தாம் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்றும் தெனிகொரியா தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக