புதன், 24 நவம்பர், 2010

Jaffna,VVT,Thunnalai,Columbathurai வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் குழுக்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு

இந்துக்களின் முக்கிய திருநாள்களில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு நேற்றையதினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் குழுக்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வீதிகள் தோறும் விளக்குகளை ஏற்றிய வேளையில் ரயர்களை போட்டு எரித்து கும்பலாக நின்று வன்முறை புரிந்த இளைஞர்கள்; குறித்த, பொதுமக்களது முறைப்பாடுகளை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை, துன்னாலை மற்றும் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வலிகாமம் பகுதியிலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள்மீது பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆயினும் இவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்ற வகையில் பொலிசார் எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக