ஞாயிறு, 28 நவம்பர், 2010

NGO தொண்டு நிறுவனம் தொடங் குவது என்பது நல்ல தொழில். சொல்லப் போனால் நல்ல வியாபாரம்

தொண்டே துணையாய் உமாபாய்...
(இலங்கையில் போர்க் காலத்திலும் போருக்கு பிந்தைய கால கட்டத்திலும் பல 'தொண்டர்' அமைப்புக்கள் சிறிப்பாக தமிழ் பிரதேசங்களில் இயங்கி வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய இக்கட்டுரை உதவலாம் என்பதன் அடிப்படையில் இங்கு பிரசுரம் செய்யப்படுகின்றது.)
இன்று தொண்டு நிறுவனம் தொடங் குவது என்பது நல்ல தொழில். இன்னும் சொல்லப் போனால் நல்ல வியாபாரம். ஆனால், அரசு உத வியோ வெளிநாட்டு உதவியோ எது வுமே இல்லாமல் அந்தப் பெண் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கு கிறார். அவ்வாறு தொடங்குமாறு அவருக்கு ஆணையிட்டவர் மகா த்மா காந்தி. இது நடந்தது 1946ஆம் ஆண்டு. அதாவது சுதந்திரத்திற்கு முன்.

கஸ்தூர்பாய் அறக்கட்டளை யின் கர்நாடகக் கிளையை உமாபாய் குந்தாபூர் தொடங்கினார். சல்லிக் காசு கையில் கிடையாது. கிராமப்பு ற மக்களை குறிப்பாக பெண்களை கைதூக்கிவிட வேண்டும் என்கிற காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற புயலெனப் புறப்பட்டார். இளம் விதவைகள், கணவனால் கைவிடப் பட்டோர், குழந்தைகள், அனாதை கள், இவர்களின் புகலிடமாய் அந்த நிறுவனம் உருப்பெற்றது. இதற்காக வீடு வீடாக சென்று உணவு தானியங் களையும், பழைய துணிகளையும், பொருட்களையும், பணத்தையும் கேட்டுப் பெற்ற அவருடைய அரிய தொண்டு இன்னும் கர்நாடக

மாநில மக்கள் நெஞ்சில் பசுமை யாய் உள்ளது. எழுத்தறிவை ஊட்டு வதிலும், கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொடுப்பதற்கும் இவர் காட்டிய ஆர்வம் அளவில்லாதது.

மங்களூரில் கோலிக்கேரி கிருஷ் ணாராவ், துர்காபாய் தம்பதியருக்கு மகளாய் 1892ல் பிறந்தவர் பவானி. இவர்தான் உமாபாய் என்று அழைக் கப்பட்டார். இவருக்கு 4 சகோ தரர்கள். 13 வயதில் சஞ்சீவ் ராவ் குந்தாபூர் என்பவருக்கு மணமுடிக் கப்பட்டார். இவருடைய மாமனார் அனந்தராவ் குந்தப்பூர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவர் உமாபாயை திருமணத்திற்கு பிறகும் படிப்பைத் தொடர வற்புறுத்தி வழிகாட்டினார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். தன் மாமனார் முன்னின்று நடத்திவந்த குந்தவி மாதர் சபாவில் பெண்களுக்கு எழுத்தறிவு புகட்டும் வேலையை இவர் விருப்பமுடன் மேற்கொண்டார்.

1920ஆம் ஆண்டு லோகமான்ய திலகர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியும் உமாபாய் மனதில் சுதந்திர தாகத்தை ஊட்டி யது. அன்று முதல் கதரணியத் துவங்கினார். காங்கிரஸ் தொண்ட ரணியில் சேர்ந்து வீடு வீடாக பிரச்சாரம் செய்யலானார். 25 வயதில் கணவனை காச நோய்க்கு பலி கொடுத்தார். ஆயினும் மாமனார் கொடுத்த ஊக்கம் காரணமாக பொதுத் தொண்டில் தீவிரமாக ஈடுபடலானார். மாமனாரால் துவங் கப்பட்ட திலகர் பெண்கள் பள்ளி யின் பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினார்.

டாக்டர். என்.எஸ். ஹர்திஹர் அமெரிக்காவில் மருத்துவம் பயின்ற வர். திலகர் மரணத்திற்குப் பிறகு இந் தியா திரும்பிய அவர் இளைஞர்க ளுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கஇந்துஸ்தான் சேவா தள்என்ற அமைப்பை உருவாக்கினார். ஹூப்ளி, தர்வார், மகாராஷ்டிரா என அதன் செயல் எல்லை விரிந்தது. இவர்க ளின் கிராம தொழிலகம் முன் மாதிரியா னது. இவர்கள் உருவாக்கிய பொருட் களின் கண்காட்சி ஹூப்ளியில் நடைபெற்றபோது ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த சேவாதளத்தில் பெண்களைத் திரட்டும் பொறுப்பை உமாபாய் ஏற்றார்.

காங்கிரஸ் வரலாற்றிலேயே அகில இந்திய மாநாட்டிற்கு காந்தி நேரடியாகத் தலைமைப் பொறுப் பேற்றது ஒரே ஒரு முறைதான். 1924ம் ஆண்டு பெல்ஹாமில் நடந்த மாநாடு தான் அது. அந்த மாநாட்டிற்கு 150 பெண் தொண்டர்களை திரட்டி னார் உமாபாய். இதில் பெரும் பான்மையோர் இளம் விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கமலாதேவி சட்டோ பாத்தியாயா எழுதுகிறார், “அந்த நிகழ்வு என் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாகும். அவரது தொண்டர் படையில் நான் சேர்ந் தேன். அவரோடு தொடர்ந்து அப் பணிகளில் கலந்தேன்

தொடர்ந்து விடுதலைப் போரில் ஈடுபட்ட உமாபாய் 1932ம் ஆண்டு கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் 4 ஆண்டுகள் அடைக்கப் பட்டார்.
உமாபாய்க்கு எப்போதும் வழிகாட்டியாய் திகழ்ந்த மாமனார் உடல் நலிவுற்று இயற்கை எய்திய செய்தி சிறையில் இருந்த உமா பாய்க்கு கிடைத்தது. ஆனால் அவரை கடைசியாகப் பார்க்கிற வாய்ப்பு கூட மறுக்கப்பட்டது. துக்கம் தாங்காமல் அழுதார். அவ ரோடு சிறையிலிருந்த கவிக்குயில் சரோஜினிநாயுடு அவருக்கு ஆறுதல் கூறினார். சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்தபோது தனது பள்ளிக் கூடம் பூட்டப்பட்டிருப்பதையும் தனது மாமனாரின் அச்சுக்கூடமும் அரசால் பூட்டப்பட்டிருப்பதையும் இவர் செயல்பட்ட தொண்டு அமைப்புகள் தடை செய்யப் பட்டிருப்பதையும் கண்டுக் கலங்க வில்லை. மாறாக வாகினி மண்டல் என்கிற புது தொண்டர்படையைத் துவங்கி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். இவரது வீடு போராளி களின் புகலிடமானது.

1942ம் ஆண்டு பீகார் பூகம்பத் தால் பாதிக்கப்பட்ட போது உமா பாயும் அவரது தொண்டர்களும் இரவும் பகலும் நிவாரணப் பணிக ளில் ஈடுபட்டனர். ஆச்சார்யா கிருப ளாணி, பாபு ராஜேந்திரபிரசாத் ஆகியோர் உமாபாயின் அளப் பரியப் பணியை கண்டு வியந்து பாராட்டினர். அதேபோல் வெள் ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தலைவர்கள் தலைமறைவாக தங்க இடம் கொடுத்தார். சுதந்திரப் போருக்கு எல்லா வகையிலும் தோள் கொடுத்தார். இவருடைய அர்ப்பணிப்பு குணத்தை பார்த்துத் தான் மகாத்மா கஸ்தூர்பாய் அறக் கட்டளை கர்நாடகக் கிளையை அவரிடம் ஒப்படைத்தார்.

விடுதலைக்குப் பிறகு தன் தியாகத்தை விலை பேசி எந்த பதவி யும் பெறவில்லை. பல தலைவர்கள் வற்புறுத்தியும் காந்தி மறைவுக்குப் பின் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. மாறாக எழுத்தறிவு இயக்கம், பெண் கல்வி, விதவைகள் மறுவாழ்வு இவற் றில் முழு மூச்சாய் ஈடுபட்டார். அரசு தந்த விடுதலைப் போராளிகளுக் கான ஓய்வூதியமும், தாமிரப் பத்தி ரம், இதர விருதுகள் எதையும் ஏற்க மறுத்தார். 1992ம் ஆண்டு மறையும் வரை நூறு ஆண்டுகள் எளிமையாய் தொண்டே துணையாய் வாழ்ந்தார். தன்
மாமனார் பெயரில் இவர் உருவாக்கிய அனந்த ஸ்மிருதி என்ற சிறிய குடில் இவரின் உறைவிட மாகவும் தொண்டின் முகவரியாக வும் கடைசி வரை திகழ்ந்தது.
(தீக்கதிர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக