வெள்ளி, 26 நவம்பர், 2010

Internet உங்களுக்கென்று ஒரு பிரத்யேக இன்டர்நெட் முகவரி வியாபாரத்தைப் பெருக்க

புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது என்பது இன்றைய உலகில் கடினமானதாக மாறி வருகிறது. போட்டி மிகுந்த உலகத்தில் வெல்ல வேண்டுமானால் ஒரு வியாபாரி பாரம்பரியத் திறமைகளையும், அதேசமயம் நவீன தொழில்நுட்பத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஏனோ புதிதாக தொழில் தொடங்கும்போது இன்டர்நெட்டுக்கு நாம் முக்கியதுவம் கொடுப்பதில்லை. ஆனால் அன்றாட வாழ்வில் ஒன்றாக மாறி விட்டது இன்டர்நெட் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விடுகிறார்கள். உண்மையில், இன்டர்நெட் வியாபாரத்திற்கு பெரிதும் உதவும்.

வியாபாரத்தை இணையதளம் என்ற பிளாட்பாரத்திற்கு ஏற்றி வைத்தால், அது மேலும் பல படி வளரவும், முன்னேறவும் வாய்ப்பு ஏற்படுகிறது. விளம்பரம், விற்பனை, இமேஜ் உருவாக்கம், வாடிக்கையாளர்கள் தொடர்பு, நம்பகத்தன்மை ஊக்குவிப்பு, ஆன்லைன் பரிமாற்றம் என பல நன்மைகள் இதில் இருக்கிறது.

இணையதளத்தில் இருப்பது என்றால் பிளாக் வைத்திருப்பது அல்ல. ஆன்லைனில் இருக்க பிளாக் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிளாக் வைத்திருப்பதில் சில சிக்கல் உள்ளது. பிளாக் நம்முடையது என்றாலும், டொமைன் நேமும், பிளாட்பார்மும் வேறு ஒருவருடையது. அதனால் விதிமுறையை மீறினால் எந்த நேரத்திலும் பிளாக் முடக்கப்படும். மேலும், அதிலுள்ள தகவல்களும் கிடைக்காமல் போய் விடும்.

அதேசமயம், நமக்கே நமக்கென்று சொந்தமாக ஒரு டொமைன் நேம் வைத்துக் கொள்வது தான் உங்கள் வியாபாரத்திற்கு ஆன்லைனில் தனித்துவம் அளிக்க சிறந்த வழி. இது எப்படி என்றால் நாமே நமக்கென்று சொந்தமாக வீடு கட்டிக் கொள்வது போல. பிளாக் என்பது வாடகை வீடு போலத்தான்.

டொமைன் நேம் என்பது உங்களின் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உங்களின் தயாரிப்புகளையோ அல்லது சேவைகளையோ இணையதளத்தில் தேட உதவும் ஒரு முகவரி.

டொமைன் நேம் பிளாக் போன்று இல்லை. இது பதிவு செய்பவருக்கே உரியது. மேலும், யாரும் உங்களது டொமைன் நேம் போல் மற்றொன்றை உருவாக்க முடியாது. டாட் இன், டாட் எடு, டாட் ஓஆர்ஜி, டாட் நெட் என பல்வேறு டொமைன்கள் இருந்தாலும் வர்த்தகத்திறகுச் சிறந்தது டாட் காம் தான்.

முதலில் தொடமைன் நேமைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் வியாபாரத்தின் பெயர் டாட் காம் அல்லது பிரான்ட் பெயர் டாட் காம் போன்று உருவாக்கி பதிவு செய்யவும். உங்கள் இணையதளத்தின் நம்பகத்தன்மை நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பதிவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துள்ளது.

கூகுள் உள்ளிட்ட இணையதள ஜாம்பவான்களுக்கு உங்கள் இணையதளத்தின் நம்பகத்தன்மையை உணர்த்த நீண்டகாலத்திற்கு டொமைன் நேமை பதிவு செய்யவும்.

டொமைன் நேமை பதிவு செய்து உருவாக்கியவுடன் உங்களுக்கென்று தனியாக மின்னஞசல் முகவரியை உருவாக்கவும். சொந்தமாக டொமைன் நேம் வைத்திருப்பதால் சாப்ட்வேரை கட்டுக்குள் வைக்க முடியும். நீங்கள் ஹெச்டிஎம்எல் பக்கங்களை பயன்படுத்தி பிரத்யேக பிரதிகளை அதிகரிக்கவும், வேர்டுபிரஸில் போடுவது உள்ளிடவைகளை செய்ய முடியும்.

இதன் மூலம் உங்கள் இமேஜை நீங்கள் நினைத்தவாறு உருவாக்கலாம். இன்னும் ஏன் தாமதம் உடனே பதிவுசெய்து உங்கள் வியாபாரத்தைப் பெருக்குங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக