வெள்ளி, 26 நவம்பர், 2010
ஆபாச இணையத் தளங்களை வடிவமைப்போர் மீது தண்டனை
அறியாமையால், விருப்பமின்றி அல்லது காட்சிப்படுத்தும் நோக்கமின்றி ஆபாச இணையத்தளங்களில் தோற்றியுள்ள நபர்களின் இரகசியத் தன்மையினைப் பேணி அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு கோட்டை நீதவான் செல்வி லங்கா ஜயரத்னவிடம் நேற்று (25) தெரிவித்தது. அந்த நபர்களின் புகைப்படங்கள் பிரசித்தி ப்படுத்தப்பட மாட்டாது எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் குறிப்பிடுகின்றது. ஆபாச இணையத் தளங்களிற்கு காட்சியளிக்கும் புகைப்படங்களை பிரசித்தப்படுத்துவதற்கு முன்னர் தேவையான வர்களுக்கு அந்தப் புகைப்படங்களை வந்து பார்வையிடுவதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகம் மற்றும் காலி, கண்டி, நீர்கொழும்பு, மாத்தறை, இரத்தினபுரி, அநுராதபுரம், அம்பாறை ஆகிய தொகுதி காரியாலயங்களில் இரகசியமாக வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் பணியகம் மேலும் குறிப்பிடுகின்றது. ஆபாச இணையத் தளங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற நபர்களின் புகைப்படங்களை நீதிமன்ற அனுமதியின் மீது பத்திரிகைகளில் பிரசுரித்ததன் பின்னர் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் சிறுவர் மற்றும் பெண்கள் பணி யகத்திடம் ஆஜரானதாகவும், மேலும் ஒன்பது பேர் தொடர்பாக அனாமதேய அழைப்புக்கள் மூலம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பணியகம் நேற்று (25) நீதவானிடம் தெரிவித்தது. ஆபாச இணையத் தளங்களை வடிவமைத்து இணையத்தில் சேர்த்து பணம் உழைப்போர் தொடர்பாக தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணியகம் கூறுகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் கூட்டாக அல்லது தனிப்பட்ட முறையில் நிறுவனங்களை நடத்திச் செல்வது அல்லது பங்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் கூறுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக