ஞாயிறு, 21 நவம்பர், 2010

Flash back : காங்கிரஸ் - திமுக கூட்டணி

Secret recordings: ஒலிப்பதிவுகள்” மூலம் கிடைக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணி  dynamics / detais, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமாக உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் துறைகளைப் பிரித்துக்கொள்வதில் பெரிதாக சீன் போட்டு அடித்துப் பிடித்து இடங்களை வாங்கியது திமுக. சரத் பவாரோ மமதா பானர்ஜியோ இந்த அளவுக்குச் சண்டை போடவில்லை.

திமுக இடங்கள் வாங்கியதில் என்னவெல்லாம் குழப்படிகள் இருந்தன என்பது அப்போதே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், இப்போது சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகள் இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.

1. டி.ஆர். பாலுவுக்கு எந்த அமைச்சர் பதவியையும் தருவதில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. (ஏன் என்ற கேள்வி எழுகிறது.)

2. தயாநிதி மாறன், தான்தான் திமுகவின் முக்கியமான ஆள் என்று காங்கிரஸிடம் தன்னை அற்புதமாக புரமோட் செய்துள்ளார் என்றும் அதனை காங்கிரஸ் தலைமை (சோனியா, ராகுல், அகமத் படேல், பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங்?) ஆரம்பத்தில் நம்பியிருக்கிறது என்றும் தெரிகிறது.

3. கனிமொழிதான் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஒரே interlocutor என்று புரிகிறது. ஆனால் கனிமொழி ஏதோ காரணத்தால் தன்னை முழுவதுமாக assert செய்யவில்லை என்றும் புரிகிறது. கனிமொழியின் negotiation skills மீது கருணாநிதிக்கோ கட்சிக்கோ நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.

4. ஆ.இராசாவுக்கு நிச்சயம் ஏதோ மந்திரி பதவி (ஏனெனில் தலித்...) என்பது முடிவாகியுள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு கொடுக்கப்படவேண்டுமா, கூடாதா என்பதில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, சுனில் பார்த்தி மிட்டல், ரத்தன் டாடா, அனில் அம்பானி முதல் பலருக்கு முக்கியமான கருத்துகள் இருந்துள்ளன. சிலருக்கு இராசா வேண்டும்; அப்போதுதான் தாங்கள் விரும்பியதைச் சாதிக்கலாம். சிலருக்கு இராசா கூடாது!

5. மாறனுக்கு கேபினட் என்றால் தனக்கும் கேபினட் அந்தஸ்து என்று அழகிரி அழும்பு பிடித்துள்ளார்.

6. அழகிரி ஒரு ரவுடி, ஆங்கிலம் பேசத் தெரியாதவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று தயாநிதி மாறன் காங்கிரஸ் மேலிடத்தில் சொல்லியுள்ளார்.

7. கருணாநிதிக்குப் பிறகு கட்சி ஸ்டாலின் கைக்கு வரும்; ஸ்டாலினை நான்தான் கண்ட்ரோல் செய்வேன் என்று தயாநிதி மாறன் தில்லியில் பலரையும் நம்ப வைத்துள்ளார் என்றும் புரிகிறது.

8. அமைச்சர் பதவிகள் கேட்டு அதில் தன் உறவினர்கள் மூன்று பேரை உள்ளே நுழைப்பது அறச் செயலாக இருக்காது என்று கருணாநிதி உணர்ந்து, கடைசியில் கனிமொழிக்கு வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.

9. தயாநிதி மாறன் கருணாநிதியிடம், தான் கட்டாயமாக கேபினட் மினிஸ்டர் ஆக்கப்படவேண்டும் என்று அகமது படேலே (சோனியா காந்தியே) விரும்புகிறார் என்பதாகக் கதை கட்டி இருக்கிறார் என்றும் தெரிகிறது.

10. கருணாநிதி நேரடியாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால், இந்தப் பிரச்னைகள் பல இருந்திரா என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு, வேறு யாரையும் அழைத்துக்கொள்ளாமல், கருணாநிதி தன் மகள் கனிமொழியுடன் மட்டும் சென்றிருக்கலாம்.

11. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்திய மந்திரி போனில் கூப்பிட்டு மிரட்டினார் என்ற செய்தி வெளியானபோது, அவசர அவசரமாக, அந்த மிரட்டல் மந்திரி இராசாதான் என்று பலரையும் நம்ப வைத்து வதந்தி பரப்பியவர் தயாநிதி மாறன் என்று தெரியவருகிறது. (ஜெயலலிதாவும் அதையேதான் சொன்னார் என்பது வேறு விஷயம்.)

***

இந்தத் தகவல்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் தெரிய வருகின்றன. ஆனால் நிச்சயம் இவையெல்லாம் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் கனிமொழிக்கும் தெரியாமல் இருந்திருக்காது. இப்போது உலகுக்கே தெரிந்துவிட்டதால், ஏதேனும் புது மாற்றங்கள் நிகழுமா?
Posted by Badri 16 comments:
Aaryan66 said...
ஆடுகளத்தில் ஆடாமல் ஆப்பச்சட்டியில் ஆடி இருக்கிறார்கள்.காங்கிரசுக்கும் இலங்கை பிரச்சனையின் சூட்டின் மத்தியில் வெற்றி பெற இவர்கள் தேவை பட்டார்களே?
 ஹரன்பிரசன்னா said...
கடந்த உங்கள் போஸ்டில் வ்ந்த கமெண்ட்டுகளைத் தொடர்ந்து, அந்த கமெண்ட்டுகளை நம்பி, இவர்களது பேச்சில் உங்கள் பெயரும் அடிபடும் என்று நானும் தோழர்களும் எதிர்பார்த்தோம்....  Anonymous said...
You had missed 2 important points

1. Dayanidhi was propagating that karunanidhi has become senile.

2. Dayanidhi had given 600 crores to Dayalu and because of that Karunanidhi could not drop Daya and had to drop Baalu instead.
 Vannangal said...
Haran

LOL):-
 Badri said...
anon: முதல் பாயிண்ட் - செனிலிடி. அதைத்தான் கொஞ்சம் நாசூக்காக (7)-ல் தெரிவித்தேன். உங்களது இரண்டாவது பாயிண்டை நான் எங்கும் பார்க்கவில்லையே - இந்த 600 கோடி ரூபாய் தகவல் எங்கே வருகிறது?
 Voice on Wings said...
பத்ரி, கீழ்க்கண்ட சுட்டியில் '600' என்று தேடவும் :)
http://openthemagazine.com/article/nation/what-kind-of-story-do-you-want
 zeno said...
நல்ல அருமையான சம்மரி! பத்து பதினைந்து பக்கங்களை படிப்பதற்குப் பதில் இது மட்டும் படித்தால் அனைத்தும் தெரிகிறது :)
600 கோடி விவகாரம் விர் சங்வி டேப்களில் வருகிறது!

பத்ரி

600 கோடி ரூபாய் வி(வ)காரம் ராடியா, வீர் சங்வி உரையாடலில் உள்ளது. இவையெல்லாம் இணையத்தில் பல மாதங்களாக படிக்கக் கிடைக்கின்றனவே நீங்கள் இன்னுமா படிக்கவில்லை? இவற்றையெல்லாம் படிக்காமல்தானா ராஜா யோக்யவான் என்று ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்படி எதையுமே படிக்காமல் எப்படி தடாலடியாக எழுத முடிகிறது? இவை எல்லாமே சி பி ஐ ரெக்கார்ட் செய்து வெளியிட்ட ஆவணங்கள். இவை போக விஜிலென்ஸ் கமிஷனர், என்ஃபோர்ஸ்மெண்ட் டைரக்டரேட் என்று இன்னும் ஏகப் பட்ட டாக்குமெண்டுகள் இணையம் முழுவதும் ரெம்பி வழிகின்றன. அவற்றில் எதையுமே படிக்காமல் ராஜாவுக்கு தாசில்தார் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறீர்கள். நன்றாக இருங்கள்.

ராஜாவுக்கு இவ்வளவு தூரம் கூஜா தூக்கியதைப் பார்த்த பொழுது உங்கள் பெயரும் அடுத்த சி பி ஐ வெளியீட்டில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். ஏற்கனவே ராஜாவுக்காக இணையத்தில் லாபி செய்யும் ஆட்களை ஏகப் பட்ட ஏஜென்சிகள் ஒட்டுக் கேட்ப்பதாகக் கேள்வி. எதுக்கு செல் ஃபோனை கொஞ்ச நாள் ஆஃப் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ராஜாவிடம் என்ன டீல் என்பதை மட்டும் தனியாகச் சொல்லுங்கள் :)) ஒரு கட்டுரைக்கு எத்தனை கோடி தருவார்கள்? யாரிடம் பேரம் பேச வேண்டும்? ராடியாவிடமா, வீர் சங்வியிடமா? பர்க்காத் தத்திடமா? இங்கே நிறைய பேர்கள் ஆஃபீஸ்களில் பொழுது போகாமல் இணையத்தில் வம்பளந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் ராஜா புகழ் பாட எவ்வளவு கமிஷன் என்பதைச் சொன்னால் அவர்களும் பிழைத்துப் போவார்கள். உங்களுக்குப் பாய்ந்த நீர் அப்படியே இன்னும் பலருக்கும் பாயட்டும் கருணை காட்டுங்கள் :))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக