வியாழன், 18 நவம்பர், 2010

EVKS: ஆ.ராசா குற்றவாளி அல்ல: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


எதிர்க்கட்சிகளின் குற்றம் சாட்டுதால் மட்டும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றவாளி ஆகிவிட முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் எஸ்.ஆர்.மோகனகிருஷ்ணன் இல்லத் திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,

ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டுவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றவாளி ஆகிவிட முடியாது. அவர் குற்றவாளி அல்ல. இதைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்குகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த செயல் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.

கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு சுமார் 6 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழலில் ஈடுபட்டுள்ளது. அதனை கணக்கு பொதுக்குழு உறுப்பினரான உள்ள பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியால் தடுகக முடியவில்லை. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் நேர்மையற்ற செயலில் ஈடுபடுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
சென்னையில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பலராமனை தாக்கியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாத படி உரிய தண்டனையை காவல்துறை பெற்று தரவேண்டும். கூட்டணி பற்றி பேச நேரம் இருக்கிறது. ஆகையால் இப்போது கூட்டணி பற்றி பேச விரும்பவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக