வியாழன், 18 நவம்பர், 2010

டிவி'யில் ஆபாச நிகழ்ச்சிகளா? ஒளிபரப்புத்துறை உத்தரவு

"டிவி'யில் ஆபாச நிகழ்ச்சியை, இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணிக்குள் ஒளிபரப்பும்படி மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
"என்.டி.டிவி' உள்ளிட்ட சில வடமாநில "டிவி' சேனல்களில் "பிக் பாஸ்' மற்றும் "ராக்கி கா இன்சாப்' என்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், "ராக்கி கா இன்சாப்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் கணவனால் பாதிக்கப்பட்ட  உ.பி., மாநிலம் ஜான்சி மாவட்டபெண், ராக்கி சாவந்திடம் தன் கணவனை பற்றி புகார் கூறுகிறார். இதை கேட்ட ராக்கி சாவந்த், அந்த பெண்ணின் கணவனை "ஆண்மையில்லாதவன்' என்பது போன்ற தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். இந்த நிகழ்ச்சியை வீட்டிலிருந்து பார்த்த சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவன் லக்ஷம் பிரசாத், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து  பிரசாத்தின் உறவினர்கள், ராக்கி சாவந்த் மீது தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்."பிக் பாஸ்' மற்றும் ராக்கி கா இன்சாப் போன்ற நிகழ்ச்சிகளில் அந்தரங்க விஷயங்கள் வெட்ட வெளிச்சமாக காண்பிக்கப்படுகின்றன. சிறுவர்கள் பார்க்கத் தகாத இந்த நிகழ்ச்சிகளை பிரதான நேரத்தில் ஒளிபரப்புவதால் சிறார்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பெற்றோர்களும், பெண்கள் அமைப்புகளும், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் புகார் கூறின.

இந்த நிகழ்ச்சிகளை பற்றிய புகார்கள் தொடர்ந்ததால்  மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள், இந்த சேனல்களை  கண்காணித்தனர். தங்களுக்கு வந்த புகார்கள் உண்மையென கருதிய ஒலிபரப்பு அமைச்சகம், மேற்கண்ட நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 5 மணிக்குள், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கும் விதத்தில் ஒளிபரப்பும் படி உத்தரவிட்டுள்ளது. இதே போல, "எஸ்.எஸ்.மியூசிக்'கின் தெலுங்கு சேனலில் நிர்வாண காட்சிகள் இடம் பெறுவதால், அந்த சேனலின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஒருவார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒளிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிடுகையில், "பிக் பாஸ் மற்றும் ராக்கி கா இன்சாப் நிகழ்ச்சிக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. எந்த காட்சிகளையும் சென்சார் செய்யச் சொல்லவில்லை. நேரத்தை மட்டுமே மாற்றியுள்ளோம். உள்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஆகிய துறைகளின் செயலர்கள் அடங்கிய கூட்டத்தில் ஆலோசித்த பின் தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றனர்.
ஷோபா - அய்யம்பேட்டை,இந்தியா
2010-11-18 19:30:41 IST
குழைந்தைகள் நல்லாவே முன்னுக்கு வருவார்கள். இன்னும் கெட்டு போக நல்ல வழி....
அப்துல் ரஹீம் அய்யம்பேட்டை - அய்யம்பேட்டை,இந்தியா
2010-11-18 19:23:14 IST
கலாச்சாரத்தை சீரழித்து கொண்டு இருக்கிறார்கள்...
christ - chennai,இந்தியா
2010-11-18 19:17:34 IST
இப்ப பகலில் ஓளிபரபர்ற நிகழ்ச்சிகள் நீல படம் ரேஞ்ச்க்கு இருக்கு. இதுல்ல நைட் வேறயா? முதலில் டிவி நிகழ்ச்சிகளுக்கு ஒரு கட்டுப்பாடு வைக்கணும் ?...
saga - palladam,இந்தியா
2010-11-18 18:13:11 IST
அட பாவிகளா! பசங்க மொதல்ல class ல நல்லா தூங்குவணுக. இனி சொல்லவா வேணும். இனிமேல் ஸ்கூல் அ night ல வெக்க வேண்டியதுதான். உருப்பட்ரமாதிரி எதாவது idea இருந்தா சொல்லற வழிய பாருங்க....
saga - palladam,இந்தியா
2010-11-18 18:04:30 IST
CHELLAMEA I LOVE YOU DA ! GREAT GOVERNMENT...
SELVA - CHENNAI,இந்தியா
2010-11-18 15:43:09 IST
WHY NOT GOVERNMENT BAN ALL ADULT PROGRAMMS INSTEAD OF ALLOWING AT MID NIGHT. OUR FUTURE GENERATION WOULD QUESTION WHAT IS INDIAN CULTURE? WE SLOWLY FOLLOWING WESTERN CULTURE INSTEAD WESTERN FOLLOWING INDIAN CULTURE! INCREDIBLE INDIA?!...
சுப்பு - லாகோஸ்,நைஜீரியா
2010-11-18 15:31:57 IST
அரசாங்க அறிவிப்பு சரியானதுதான்....
புவன் - மதுரை,இந்தியா
2010-11-18 15:14:34 IST
"அந்த சேனலின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஒருவார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..." என்பதால் அந்த ஒரு வாரத்தில் LKG கடைசி பென்ச் மாணவர்கள் கண்டிப்பாக திருந்தி விடுவர் என்கிற நம்பிக்கையுடன்.. - UKG கட்ட கடைசி பெஞ்ச் மாணவர்கள்....
முருகதாஸ் - Vengaalore,இந்தியா
2010-11-18 14:53:12 IST
என்ன சொல்ல வர்றானுங்க? ராத்திரியில மட்டும்தான் அடுத்தவன் மானத்த வாங்கனும்னு சொல்றானுவளா? தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துறதுக்குன்னு எந்த ஒரு தகுதியும் இல்ல போலருக்கு. பாலியல் தொழில் செய்யறவங்கள கொண்டுவந்தா இப்பிடித்தான் பொறுப்பில்லாம எதையாவது பேசுவாங்க. எது எப்பிடி போனா என்ன?. டி,வி. கம்பெனிக்காரனுக்கு வருமானமும், அரசியல்வாதிக்கு பணமும் வந்தா போதும். இது உருப்படறமாதிரி தெரியல....
பிரேம் - பெங்களூர்,இந்தியா
2010-11-18 14:16:27 IST
வட போச்சே!...
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-18 14:05:09 IST
அட போங்கையா, இப்ப எங்க தமிழ்நாட்டு சினிமா எல்லாத்துலயுமே ஆபாச காட்சிகள் தான் மற்றும் ஆபாச பேச்சு தான். இந்த கன்றாவி காட்சியை காட்டிலுமா உனக்கு சீன் படம் ஒளிபரப்பு. எங்க நாட்டில் உங்க நைட் ஷோ காட்சியை போட்டாலும் எங்க மக்கள் பார்க்க மாட்டார்கள். ஏன் என்றால் எங்க டிவியில் போடும் மானாட மயிலாட நிகழ்ச்சியை பாருங்கள். எவ்வளவு ஆபாசமாக இருக்கு என்று. இதுக்கு மேலயா ஆபாசம் வேண்டு என்றோ சொல்வீர்கள். அல்லது எங்க சினிமா போஸ்ட்டை பாருங்க. இதுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக