வியாழன், 25 நவம்பர், 2010

விஜயகுமார் - மஞ்சுளாவின் சொத்துக்களைப் பங்கிடுவதில் தகராறு, மகள் வனிதா - அப்பா விஜயகுமார் மோதலாக

சென்னை: எந்த தகப்பனாவது மகள் மீது போலீசில் புகார் கூறுவாரா... ஆனால் என் தந்தை விஜயகுமார் அதைச் செய்துள்ளார். அவரெல்லாம் ஒரு தகப்பனா... இந்த அளவு பிரச்சினையை தூண்டிவிட்டவர்கள் இயக்குநர் ஹரி, அவர் மனைவி ப்ரீதா மற்றும் நடிகர் அருண்குமார் என்று புகார்களை அடுக்குகிறார் நடிகை வனிதா.

நடிகர் விஜயகுமார் குடும்ப விவகாரம் போலீசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. விஜயகுமார் குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துக் கொள்வதோடு, புதிது புதிதாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

இதில் யார் பக்கம் உண்மை... யார் சொல்வது உண்மை என்றே தெரியாத அளவுக்கு அவர்களுக்குள் சண்டை நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

அப்பா விஜயகுமார் தன்னை அடித்துவிட்டார் என்று வனிதாவும், மருமகன் ஆனந்தராஜ் அடித்துவிட்டார் என்று விஜயகுமாரும் புகார் கொடுத்து, அதில் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலில் மருமகன் ஆனந்தராஜை கைது செய்துள்ள போலீஸ், அடுத்து விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண்குமாரை கைது செய்யவிருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில், நடக்கும் அத்தனைக்கும் காரணம் தனது சகோதரி ப்ரீதா மற்றும் அவரது கணவர் இயக்குநர் ஹரி ஆகியோர்தான் என்றும், இதில் தனது சகோதரரும் நடிகருமான அருண்குமாருக்கும் முக்கியப் பங்குள்ளதாகவும் வனிதா புகார் கூறியுள்ளார்.

"சொந்த மகள் மீதே எந்த அப்பாவாவது புகார் தருவாரா... ஆனால் விஜயகுமார் இந்த வேலையைச் செய்துள்ளார். அவர் ஒரு தந்தையா... என் மகன் விஜய் ஹரியை என்னிடமிருந்து பறிக்கப் பார்க்கிறார். அதற்கு போலீஸ் துணை போகிறது.

அனைத்துக்கும் காரணம் ப்ரீதா, டைரக்டர் ஹரி மற்றும் நடிகர் அருண்குமார்தான். அவர்களைச் சும்மா விடக்கூடாது," என்றார்.

சொத்துத் தகராறு?

இதற்கிடையே நடக்கிற அனைத்து சம்பவங்களுக்கும் காரணம், விஜயகுமார் சொத்துக்களை பிரித்துத் தருமாறு வனிதா கேட்பதுதான் என்று கூறப்படுகிறது. தனது மகன்களை வைத்து நாடகமாடி சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார் வனிதா என்று அருண்விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

விஜயகுமாருக்கு இரு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணுக்குப் பிறந்தவர்கள் நடிகர் அருண்குமார் மற்றும் அவர் தங்கை கீதா. கூலி படத்தில் சரத் குமார் தங்கையாக நடித்தவர் கீதா.

இன்னொரு மனைவி மஞ்சுளாவுக்குப் பிறந்தவர்கள் வனிதா, ப்ரகீதா மற்றும் ஸ்ரீதேவி. மூவருமே நடிகைகள்தான். ஆனால் பெரிதாகப் பிரகாசிக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டனர். நடிகை ப்ரீதாவின் கணவர்தான் இயக்குநர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்குள் விஜயகுமார் - மஞ்சுளாவின் சொத்துக்களைப் பங்கிடுவதில் பெரும் தகராறு மூண்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் மகள் வனிதா - அப்பா விஜயகுமார் மோதலாக வெளிப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக