புதன், 10 நவம்பர், 2010

பாரீஸில் பாக். தீவிரவாதிகள் கைது.

பாரீஸில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் ஆப்கான் அருகே உள்ள மேற்கு பாகிஸ்தான் பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் என்று பிரான்ஸ் காவல்துறையினர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரீஸில் உள்ள பிரதான மசூதி ஒன்றின் தலைவருக்கு சில வாரங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவிப்பதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக