உடலில் ஊசிகள் ஏற்றப்பட்ட மற்றுமொரு இலங்கைப் பணிப்பெண் நாடு திரும்பினார்..!
உடலில் ஊசிகள் ஏற்றப்பட்ட மற்றுமொரு இலங்கைப் பணிப்பெண் நாடு திரும்பியுள்ளார். குருநாகல் மாவட்டம் இப்பாகமுவ கொகரல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான வீரய்யா லெட்சுமி என்ற பெண்ணின்மீது எஜமானர்கள் ஊசிகளை ஏற்றியுள்ளனர். குவைட்டில் வைத்து குறித்த பெண் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த பெண்ணின் உடலில் காணப்பட்ட ஒன்பது ஊசிகள் சத்திரசிகிச்சை மூலம் நேற்றையதினம் அகற்றப்பட்டுள்ளன. குருணாகல் அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக