அம்மா பேச்சைக் கேட்காமல் சூதாட்டம் ஆடி பணத்தை இழந்தேன் என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.
சமீபத்தில் தோழிகளில் பெட்டிங் வைத்து சூதாட்டம் ஆடினாராம் த்ரிஷா. இந்த விளையாட்டு வேண்டாம் என்று அவரது அம்மா உமா சொல்லியும் கேட்காமல் ஆடினாராம். இதில் அவர் ஒரு முறை கூட ஜெயிக்காமல் பணத்தை இழந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பணம் வைத்து சூதாடுவது தவறு என்று சிறுவயதிலேயே அம்மா அடிக்கடி சொல்வாங்க. எக்காரணம் கொண்டும் பணம் வைத்து சூதாடக் கூடாது என்று என்னிடம் உறுதிமொழியும் வாங்கியிருந்தார்.
ஆனா நான் இன்னும் குழந்தையில்லையே... விவரம் தெரிந்த வயது என்பதால் ஆர்வத்தில் ஒருமுறை ஆடித்தான் பார்ப்போமே என்று சூதாட்டத்தில் இறங்கினேன். இன்னொன்று என் தோழிகள் எல்லோருமே பெட்டிங் ஆடுவதில் கில்லாடிகள். அதனால் எனக்கும் அதுபோன்று ஆட ஆசை வந்தது.
சமீபத்தில் தோழிகளுடன் பெட்டிங் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டேன். எல்லா ஆட்டங்களிலும் தோழிகளே ஜெயித்தனர். நான் அதிக பணத்தை இழந்து நஷ்டப்பட்டேன்.
அப்போதுதான் அம்மா எதற்காக பணம் கட்டி சூதாடக்கூடாது என்று தடுத்தார் என்பது புரிந்தது. இனிமேல் ஒருபோதும் பணம் வைத்து சூதாடுவதில்லை என்று சபதமே செய்துவிட்டேன்..." என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக