போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கனடாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தார் என கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவரின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
இந்த வழக்கு நேற்று கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் மாகாண நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், குற்றம் சுமத்தப்பட்டவர் கனேடிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தாரா? என்பதை தேடிப்பார்ப்பதற்காக கால அவகாசம் தேவையென அவரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. குறித்த தமிழ் அகதி கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகத்தை வந்தடைந்த 492 தமிழர்களில் ஒருவராவார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக