வியாழன், 4 நவம்பர், 2010

கன்னியாஸ்திரி வழக்கு:




திருச்சி பாதிரியார் காவல்நிலையத்தில் சரணடைய மதுரை ஐகோர்ட் உத்தரவு.
திருச்சி தூயவளனார் கல்லூரி முதல்வரும் பாதிரியாருமான ராஜரத்தினம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி போலீசில் புகார் செய்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இதையடுத்து தலைமறைவான பாதிரியார் ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என பிளாரன்ஸ் மேரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 முன்ஜாமீன் கோரிய ராஜரத்தினம் மனு நேற்று நீதிபதி ஜி.ராஜசூர்யா முன் விசாரணைக்கு வந்தது. பிளாரன்ஸ்மேரி தரப்பில் முன்ஜாமீன் வழங்க ஆட்பேசம் தெரிவித்து மனு செய்யப்பட்டது. அவரும் நேற்று ஆஜரானார்.
அவரது சார்பில் மூத்த வக்கீல் பிரபாகரன், வக்கீல் வெங்கடேசன் வாதிடுகையில், ராஜரத்தினம் மீதான குற்றச்சாட்டு சமுதாயத்திற்கு எதிரானது. புகார்தாரரை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து, மொபைல்போனில் படமெடுத்து மிரட்டியுள்ளார்.

கன்னியாஸ்திரி சபை தலைவருக்கு புகார்தாரர் கடிதம் எழுதியுள்ளார். 2008ல் கருக்கலைப்பு செய்த பின், புகார்தாரர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
ராஜரத்தினத்தை கைது செய்து விசாரித்தால், உண்மை தெரியும். முதல் தகவல் அறிக்கை தாமதமாக பதிவு செய்யப்பட்டதாக கூறுவதை ஏற்க கூடாது.

ராஜரத்தினத்தை மருத்துவசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சாதாரண கற்பழிப்பு வழக்காக எடுக்க கூடாது. புகார்தாரரை மிரட்டுகின்றனர். அவருக்கு பாதுகாப்பு இல்லை. மருத்துவ சாட்சிகள், ஆதாரங்களை கலைக்க வாய்ப்புகள் உள்ளன. முன்ஜாமீன் கொடுக்க கூடாது, என்றனர்.

:பிளாரன்ஸ்மேரிக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு வக்கீல்அன்புநிதி, பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ராஜரத்தினம் சார்பில் ஆஜரான சேவியர்ரஜினி, மூத்த வக்கீல் ஆஜராக, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும், என்றார். அதையடுத்து விசாரணையை  நீதிபதி ஜி.ராஜசூர்யா இன்று தள்ளிவைத்தார்.

இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, புகாருக்குள்ளான பாதிரியார் ராஜரத்தினம் வரும் திங்கள் கிழமை அன்று திருச்சி

கோட்டை காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும்.   அதன்பிறகு அவரை திருச்சி ஜே-1 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார்
ஆஜர்படுத்த வேண்டும். அங்கு அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்.

அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என போலீசார் விரும்பினால் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து
அனுமதி பெறலாம்.

அவர் ஜாமீன் பெற்ற பின் தினமும் காலை, மாலை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என
உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக