செவ்வாய், 16 நவம்பர், 2010

நாவற்குழியில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களை வெளியேற்ற நடவடிக்கை: ஜனாதிபதி உத்தரவு

யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் அண்மையில் குடியேறிய சிங்கள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதியும், வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவும் தமக்கு அறிவித்திருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள், அத்துமீறிய குடியேற்றவாசிகளாக அரசாங்கத்தினால் கருதப்படுவதன் காரணமாக அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிடக்ளஸிடம் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் இருந்து வந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்களவர்களில் 102 பேர்வரையில் நாவற்குழி பிரதேசத்தில் அத்துமீறி குடியேறியுள்ளனர்.
அவர்களை படையினரே அழைத்துச்சென்று குடியமர்த்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இந்தக்குற்றச்சாட்டை, படைத்தரப்பு நிராகரித்துள்ளது.
இதேவேளை இந்த சிங்கள குடும்பங்களுடன் மேலும் 110 தமிழ் குடும்பங்களும் அங்கிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக