கோ படத்தின் டிரெய்லருக்கு இணையதளத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்த இயக்குனர் கே.வி.ஆனந்த், “அயன் படத்தை விட இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாய் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை கோ பூர்த்தி செய்யும்” என்றும் தெரிவித்தார்.
ஏதோ குவியமில்லா காட்சிப் பேழை... என்ற ஹாரிஸ் ஜெயராஜின் மயக்கும் மெலடி பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் வைரமுத்துவின் மகன் கார்க்கி. எந்திரன் படத்தில் கார்க்கி எழுதிய இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட். அது சரி, அதென்ன குவியமில்லா காட்சிப் பேழை? குவியமில்லா என்றால் 'ஆவுட் ஆப் போகஸ்' என்று அர்த்தமாம்.
இந்த படத்தில் நாயகன் ஜீவா புகைப்பட நிருபராக நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புகைப்படக் காரனின் காதல் குழப்பத்தை விளக்க இதை விட ஒரு வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை என்று சொல்கிறார் கார்க்கி. இந்த படத்தில் இன்னொரு பாடலையும் கார்க்கி எழுதியிருக்கிறார். விரைவில் உங்கள் செவிகளுக்கு மயக்கம் சேர்க்க வருகிறது குவியமில்லா ஒரு காட்சிப் பேழை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக