இந்நிலையில் அவை நடவடிக்கை பாதிக்கப்படுவதால் மத்திய அமைச்சர் ராஜா பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தி.மு.க., தலைமை வலியுறுத்தியது. இதனையடுத்து நேற்று இரவில் ராஜா ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று பார்லி.,யில் ராஜா விவகாரம் பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை விட்டபாடில்லை.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லி., கூட்டு கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ., இடதுசாரிகள், மற்றும் அ.தி.மு.க.,வினர் இன்று பார்லி.,யில் வலியுறுத்தினர். பிரதமர் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் .
இரு முறை ஒத்திவைப்பு : இதனால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் கடும் கூச்சல் நிலவியது. உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அமளி தொடர்ந்ததால் லோக்சபாவை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.இதற்கிடையில் இது தொடர்பான பொதுநல வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. முதலில் காலை 11 மணிக்கு துவங்கியதும் கூச்சலையடுத்து 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கூடியதும் மீண்டும் அமளி நிலவியதால் நாள் முழுவதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
விசாரணை தேவையில்லை என்கிறார் சிதம்பரம்: இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு அறிக்கை பார்லி., கணக்கு குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சி சார்பில் உறுப்பினர்கள் இருப்பதால் பார்லி., கூட்டு கமிட்டி விசாரணை தேவையில்லை என்றார்.
கபில் சிபலுக்கு தொலைதொடர்பு துறை : தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்தப்பதவியை கூடுதல் பொறுப்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் ஏற்கிறார். மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் பதவியை பிருதிவிராஜ் சவான் துறந்ததை அடுத்து அந்தப் பொறுப்பையும் சிபல் கூடுதலாக கவனித்து வருகிறார். தி.மு.க., வினருக்கு மீண்டும் தொலைதொடர்பு துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் அப்பொறுப்பை தன் வசம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும் இது ஒரு தற்காலிக முடிவு என்றும் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜகன் - chennai,இந்தியா
2010-11-15 15:23:49 IST
இது ஒரு கூட்டுகொள்ளை. ராஜாவின் பதவி விலகல் ஒரு நாடகமே. மொத்தத்தில் மிகப்பெரிய அரசாங்க நிறுவனம் BSNL மூழ்கிக்கொண்டு இருக்கிறது. முன்று லட்சம் பணியாளர்கள் முப்பது வருடமாக பாடுபட்டு உயர்த்திய நிறுவனத்தை முன்றே ஆண்டுகளில் கொள்ளை அடித்து விட்டார்கள். மற்றுமொறு AIR INDIA...
boobalan - illinois,யூ.எஸ்.ஏ
2010-11-15 15:12:08 IST
enthan ipadi pannuranganu theriyala...
ஜெகன் - சிகாகோ,இந்தியா
2010-11-15 14:56:21 IST
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த ஊழலில் உண்மைப் பயனாளிகள் யார் என்றும், அப்பணத்தை பங்கு போட்டுக் கொண்டவர்கள் யார்?அலைவரிசை 2 ஒதுக்கீட்டில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 381 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த முடிவுகளையே தான் பின்பற்றியதாக, ராசா காரணம் சொல்லுகிறார். ஆனால், 2001 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சந்தை மதிப்பின் அடிப்படையிலேயே, 2008, 2009 ஆம் ஆண்டுகளில், ஒதுக்கீடு செய்ததன் மர்மம் என்ன?யூனிசெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள், திடீர் உப்புமா, திடீர் புளியோதரை போல, திடீரென உருவான நிறுவனங்கள் ஆகும். ஒரு அறிவிப்புப் பலகையை மட்டும் ஒரு அலுவலகத்தில் மாட்டிக்கொண்டு, தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்ட கம்பெனிகளுக்கு, அலைவரிசை உரிமத்தை அமைச்சர் ராசா வழங்கினார். அந்த உரிமத்தைப் பெற்ற ஒரு மாதத்துக்குள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு, அந்த உரிமத்தை அந்த நிறுவனங்கள் விற்றுக் கொள்ளை அடித்து விட்டன. இப்படி ஏராளமான, பினாமி நிறுவனங்களுக்கு, அமைச்சர் உரிமம் வழங்கி உள்ளார். 2009 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தபின், தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தைத் தானே பெற வேண்டும் என்று ஆண்டிமுத்து ராசா, பல வழிகளில் முயற்சித்தார். பெரிய தொழிற்சாலைகளிடம் உரிமம் பெற்றுத் தருகின்ற வைஷ்ணவி கார்ப்பரேட் கன்சல்டன்ட், நோசிஸ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் சர்வீசஸ், விட்டோமிக் கன்சல்டிங் கம்பெனி, நியூகாம் கன்சல்டிங் கம்பெனி ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு நிர்வாக இயக்குநராக உள்ள, நிரா ராடியோ என்ற புரோக்கருடன், ஆண்டிமுத்து ராசா, பலமுறை தொலைபேசியில் பேசிய, ஆதாரங்கள் வெளிவந்து விட்டன. அதுமட்டும் அல்ல. அந்தப் பேச்சில், 'தொலைத்தொடர்பு அமைச்சர் பதவி, ராசாவுக்கே கிடைக்க வேண்டிய ஏற்பாடுகள் நடப்பதாக' நிரா ராடியோ கூறுகிறார். இதே பெண்மணியுடன், தமிழ்நாடு முதல் அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் தொலைபேசியில் பேசிய உரையாடலும் பதிவு ஆகி உள்ளது. இந்த இமாலய ஊழல் குறித்து, உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு சவுக்கடி கொடுத்தது. இன்று 15 ஆம் தேதி அதுகுறித்த விசாரணை நடப்பதால், மேலும் பலத்த கண்டனம் வரக்கூடும் என்ற பயத்தால், வேறு வழி இன்றி, மத்திய காங்கிரஸ் அரசு, ராசாவை பதவியில் இருந்து வெளியேற்றுமாறு தி.மு.க.வுக்கு நிர்பந்தம் தந்தது. 1,76,000 கோடியும், ராசா குடும்பத்துக்கே போய்ச் சேர்ந்து இருக்க முடியாது. இந்தக் கொள்ளைப் பணத்தின் உண்மைப் பயனாளிகள் யார்? பங்கு போட்டவர்கள் யார்? என்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து உள்ளன. இந்தக் கொள்ளையில் தி.மு.கழகத்தின் பெரும்புள்ளிகளுக்குப் பங்கு உண்டு என்பதுதான், உண்மையாக இருக்க முடியும்....
HARI - chennai,இந்தியா
2010-11-15 14:19:38 IST
Government of india is thinking thousand time on following. 1. For reducing Petrol/Fuel price. 2. Wasting the food in ware houses. But refused to give for poor people. 3. Collecting tax in time, if not paid penalty also collected. 4. Price of essential commodiy was increased, but tax benefit was not increased as per commodity price increase. 5. From individual buisness man tax were not collected. So much clever on above things. How they loose this amount. Which is very big amount for country like india....
குமார் - சென்னை,இந்தியா
2010-11-15 14:05:34 IST
ராஜா ராஜினாமா மட்டும் போதாது....கொள்ளை போன பணம் மீண்டும் நாட்டுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்....மண் மோகன் சிங் மக்களுக்கு இந்த கொள்ளை தொடர்பாக விளக்கம் தர வேண்டும்..........
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-15 13:52:26 IST
சிதம்பரம் ரொம்ப பேசாத! நீ நிதி அமைச்சரா இருந்தப்ப தான் இந்த ஊழல் நடந்துள்ளது. உன்னை வேற துறைக்கு மாத்தியும் புத்தி வரலையா! தோற்ற பின்னும் வெற்றிபெற்றதாக அறிவித்தது போல் நீ பதில் சொல்லும் இடம் தமிழ்நாடு இல்லை. எதிர்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்ல அந்த இடத்தில நீ ஒன்னும் நிதி அமைச்சரும் இல்லை. பிரதமரும் இல்லை. எதுக்கு முந்திரி கொட்டை மாதிரி சம்பந்தமே இல்லாம பதில் சொல்ற! மஞ்சள் துண்டோட சேர்ந்து தமிழ் நாட்டை கூறுபோட சப்போர்ட் செய்றியா! எப்ப வேணுமுன்னாலும் தேர்தல் வரலாம். கவலை படாம தோத்தாலும் ஜெயிக்கலாம் என்ற நினைப்பு....
கோபால் - bangalore,இந்தியா
2010-11-15 13:40:42 IST
பத்து ௦வருசத்துக்கு முன்னாடி ஒரு அமைச்சர் செய்த விஷயத்த நீ இப்போ செய்தாயா !!! அடப்பாவி, நீ இருந்தது மத்திய தகவல் தொடர்பு துறைப்பா.... ரொம்ப வேகமான இடம்பா... நாளுக்கு நாள் ஒரு புதிய விஷயம் வந்து கொண்டே இருக்கும். உங்களோட இந்த மாதிரியான முட்டாள்தனம் தான் தனியார் நிறுவனங்கள் வளர்வதற்கு காரணமே!!! You can find new technologies/concepts everyday in IT & Communications department. Oh!!!...
ஜி.எஸ்.ராஜன் - chennai,இந்தியா
2010-11-15 13:32:13 IST
ராசாவை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்.மேலும் ராசாவை நிச்சயம் கைது செய்து விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும் .நீதிமன்றதில் தற்போது விசாரணை நடந்து வந்தாலும் கைது செய்து விசாரிப்பது அவசியம்,அதுதான் நியாயம். மேலும் ஊழல் செய்த பணத்தை பறிமுதல் செய்து,குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தேச துரோக குற்றம் செய்ததாக கருதப்பட்டு சம்பந்த பட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுத்தால்தான் அரசியல்வாதிகள் கொட்டம் ஒடுங்கும். இனிமேல் தவறு, ஊழல் செய்ய பயப்படுவார்கள்.விரைவாக விசாரணை நடத்தி ஊழல் செய்த பணத்தை அரசுக்கு செலுத்த கால நிர்ணயம் செய்து கட்டளை இட வேண்டும்,மேலும் செலுத்த தவறினால் ஜாமீனில் வெளிவராத வகையில் கடுமையான தண்டனை அளிபபது தான் சரியான முடிவாகஅமையும்,அதுவும் காலத்தின் கட்டாயம். இந்த ஊழல் மூலம் பெறப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய்களை பறிமுதல் செய்து வசூல்லிகா...
Balshree - Gurgaon,இந்தியா
2010-11-15 13:24:52 IST
திரு. சுப்ரமணியம் சுவாமி நேற்று அளித்த ஒரு பேட்டியில், வராமல் போன வருவாய், CAG ரிப்போர்ட்படி 176000 கோடியில், முறைகேடாக செய்யப்பட்ட பரிவர்த்தனையின் அளவு 60000 கோடி என்று கூறினார். இது பேங்க் பரிவர்த்தனை மூலம் அமெரிக்க (உளவு) அமைப்புகளால் மோப்பம் பிடிக்கப்பட்டு உள்ளதாக சொன்னார். இது சாத்தியமே, ஏனெனில் இன்று பன்னாட்டு பண பரிவர்த்தனைக்கு பயன்படும் "IBAN மற்றும் SWIFT Code அமெரிக்க கண்டுபிடிப்புகள். இவற்றின் gateway அமேரிக்கா மூலமே நடக்கிறது. மேலும் இந்த முறைகேட்டு பரிவர்த்தனையில் பங்கு முன்னாள் அமைச்சருக்கு 10 சதம், தலைவர் குடும்பத்துக்கு 50 சதம், டெல்லி பார்டிகளுக்கு 40 என்றும் கூறினார். வரும் தேர்தல்களில் இந்த பணமும் விளையாடும். அரசு கஜானாவுக்கு இந்த பணம் வருமா?...
s.mani kandan - newdelhi,இந்தியா
2010-11-15 13:11:50 IST
Dear raja, Where is spectrum money? when u will give return to govt?...
லொடுக்கு பாண்டி - கோவை,இந்தியா
2010-11-15 13:07:13 IST
நஷ்டம் 176000 கோடி ரூபாயாக இருந்தாலும் இவர்கள் சுருட்டியது இவ்வளவு இருக்காது. அது ஒரு 76000 கோடியாக இருக்கலாம். இந்த 76000 ௦௦௦ கோடியை ஆட்டையை போட்டது உண்மையில் யார் என்பதை கண்டறிய வேண்டும். அது 87 வயது இளைஞர் or 40 வயது யுவதியாகத்தான் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனை கண்டுபிடித்தால் ஷெர்லாக் ஹோம்ஸ், ஆல்பர்ட் ஹிட்ச்காக் நாவல்ஸ் போன்று விறு விறு வென்று விறுவிறுப்பாக இருக்கும்....
vel - madurai,இந்தியா
2010-11-15 13:06:42 IST
The resignation was forced due to jaya’s offer and that congress party & PM himself came under suspicion of the people. The economist PM should ensure that the looted money is returned to the public accounts …to prove that he is indeed honest. Otherwise , the honesty is incomplete....
சாமி - bangkok,தாய்லாந்து
2010-11-15 12:47:10 IST
நான் கூட தாய்லாந்தில் இருந்து வந்து அவசர அவசரமாக ஒரு மந்திரி பதவியை பெற்று முடிந்தால் ஒரு லட்சம் கோடியை அடித்து அடுத்த மாதத்தில் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் விடலாம் என்று இருக்கிறேன். ஏன்னா நம்ப நாட்டுல ஓரமா நின்னு ஒன்னுக்கு அடிப்பவன, பொழுது போகாம சீட்டு ஆடுறவன எல்லாம் போட்டு போலீஸ் அடிச்சு நோண்டி நொங்கு எடுத்துருவாங்க. ஆனா கோடிக்கணக்குல கொள்ளை அடிக்குறவங்களை சி.பி.ஐ கூட நெருங்க முடியாது. ஜார்கண்ட் மது கோடாவில் ஆரம்பித்து, மாயாவதி, சமீபத்தில் கேதான் தேசாய், சவான், ராஜா, கல்மாடி என்று யாராக இருந்தாலும் பதவியை ராஜினாமா செய்வதே பெரிய சாதனை என்று காங்கிரஸ் பீற்றி கொள்கிறது. அவர்கள் அடித்த பணம் எல்லாம் என்னவானது, யார் யாருக்கு பங்கு போனது என்பதெல்லாம் தெரியாத மர்மங்கள் ஆகிவிடுகிறது. நம்ப காங்கிரஸ் ஆட்சியில் எந்த மந்திரியை அல்லது காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அல்லது பிரதமரை கேட்டீர்கள் என்றால் கூட கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கும் அல்லது பார்த்து கொள்ளும் என்பார்கள். யார் அந்த தலைமை என்பது விடை தெரியாத கேள்வி. எந்த உயிர் போகிற பிரச்சினைக்கும் பிரதமரோ அல்லது சோனியாவோ கருத்து தெரிவிப்பதில்லை. தலைமை என்ன செய்ய போகிறது என்பது தெரியாமல் பொது மக்கள் தான் மண்டையை பிச்சுக்க வேண்டியது தான்....
சுரேஷ் - kanyakumari,இந்தியா
2010-11-15 12:29:57 IST
I strongly support the opposition part, their demand is not for the post but for a joint inquiry for the scam which every citizen of this country will expect.This is not a small thing to leave it to the ruling party. We need a thorough open and fair investigation....
elayaraja - andaman,இந்தியா
2010-11-15 12:28:48 IST
நன்றி !!! நல்ல முடுவு எடுத்ததுக்கு! ஊழல் விஷயம் நம்ம நாட்டுக்கே கேடு என்பதை எப்போதான் உணர போரான்களோ தெரியல ... கடந்த 3 மாதத்தில் மட்டும் 3 மந்திரிகள் ஊழல் காரணமாக ராஜினாமா செய்திருகிறார்கள். இது upa அரசுக்கு அவமானம்.. ராஜினாமா செய்தால் மட்டும் போதாது .. அவர்களிடமிருந்து பணத்தையும் பறிக்க வேண்டும் ......
sakipriyan - vellore,இந்தியா
2010-11-15 12:01:08 IST
ராஜிநாமா கடிதம் கொடுத்து ராசா தியாகி ஆக நினைக்கிறார் போலும். அரசு முறைப்படி பதவி நீக்கம் செய்வதுடன் கொள்ளையடித்த பணத்தை பற்றிய விவரங்களை ஆதாரத்துடன் மக்கள் முன்னிலையில் சமர்பிக்க வேண்டும். இந்த ஊழலில் சம்மந்தபட்ட யாராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கபட வேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக