by Teavadai
யாழ்ப்பாணத்தானுக்கு மற்ற ஊர்க்காரனை இளப்பமாகக் கதைப்பதில் தனிக்குஷி. வன்னியான் மட்டக்களப்பான் மன்னாரான் வடக்கத்தையான் இப்படி மற்ற ஊர்க்காரர்களை பட்டப்பெயர் கொண்டு அழைத்து தன்னை ஒரு மேன்மையானவனாகக் காட்டிக்கொள்வதில் அவனுக்கு நிகர் இல்லைதான். ஆனால் ஆயுதப்போராட்டம் தொடங்கியபோது யாழ்ப்பாணத்தான் செய்த வேலை ஐரோப்பா நாட்டிற்கு பறந்துபோனதுதான் அதன் பின் போராட்டத்தை நடாத்தியவர்கள் வன்னி இளைஞர்களும் கிழக்கு மாகாண இளைஞர்களும்தான். யாழ்ப்பாணத்தான் ஐரோப்பிய நாட்டில் கக்கூசு முதற்கொண்டு அனைத்தையும் கழுவிக்கொண்டு காசு சம்பாதிப்பதில் கவனமாக இருந்தான். அரைவேற்காடு பிரபாகரனை உசுப்பேத்தி புலிஇயக்கத்தை வீங்கச்செய்து பெருமை கொண்டாடிய யாழ்ப்பாணத்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாணியில் வீர வசனம் பேசிக்கொண்டிருந்தான்.
2004ல் கிழக்கு மாகாணம் புலிகளிடம் இருந்து விலகியபோது புலிகளுக்கு வீழ்ச்சியும் அழிவும் தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து வீரவசனம் பேசிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தான் களத்திற்குப்போய் சண்டைபோடத்தயாரில்லை. வன்னி இளைஞர்கள் அநியாயமாக யுத்தத்தில் அழிந்துபோக புலம்பெயர்நாடுகளில் காசு சேர்ப்பதில் யாழ்ப்பாணத்தான் குறியாக இருந்ததான். புலிகளுக்கு எதிராக இந்தியா இலங்கை பாகிஸ்தான் சீனா என கூட்டு சேர்ந்து அடியைப்போட ஐரோப்பிய கனடா அவுஸ்திரேலிய தெருக்களில் விழுந்து புரண்ட யாழ்ப்பாணத்தானால் பிரபாகரனைக் காப்பாற்ற முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் கோவணத்தோடு பிரபாகரன் கிடந்தபோது சேர்ட்டும் ரவுசரும் போட்டு போய் பார்த்த கிழக்கான் கருணா கண்கலங்கியதும் பத்திரிகைகளில் வந்த செய்திகள்.
அப்போதும் யாழ்ப்பாண்த்தானுக்கு தெரிந்திருக்கவேண்டும். எல்லொரையும் அணைத்துப்போகின்ற அரசியல் இல்லாட்:டி என்ன நடக்குமென்று. கிழக்கு பிரிந்தால் யாழ்ப்பாணத்தானுக்கு கோவணம்தான் மிஞ்சும் என்கிற வரலாற்று உண்மை அது.
இதில் பிரதேசவாதம் இல்லை. ஆனால் யதார்த்த உண்மை இருக்கிறது. வீரவசனம் பேசுவது மட்டும் விவேகமில்லை. யாழ்ப்பாணத்தான் அதை மட்டும்தான் பேசி வந்திருக்கிறான். புலிகள் கடைசிக்காலத்தில் வன்னி மக்களை துன்புறுத்தியிருக்காவிட்டால் அந்த மக்கள் புலிகளுக்கு நல்லதொரு அரணாக இருந்திருப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தான் மாவிலாறில் கைவைத்து மடுமாதாவை தூக்கிக்கொண்டு ஓடி சிறுவர் சிறுமிகளை பலாத்காரமாக இயக்கத்திற்கு கடத்தி மக்களை ஆயுதமுனையில் முள்ளிவாய்க்கால் வரை கடத்தி கடைசியில் யாருமே காப்பாற்ற முடியாதவாறு அழிந்துபோனார்கள்.
சிந்திப்பதில்லை. மற்றவர்களின் கருத்துக்களை ஏற்பதில்லை. முற்று முழுக்கு சுயநலப்புத்தி கடைசியில் சர்வதேசமும் கைவிட்ட நிலையில் உலகின் நான்காவது பெரிய ராணுவத்தை விரட்டிய வீரர்கள் உலகின் சிறிய ராணுவத்திடம் தோற்றுப்போனார்கள்.
துலைஞ்சுபோயம் புத்தி வரவில்லைப்பாருங்கள். இன்னும் வீரவசனத்திற்கு குறைவில்லை. 12000 பேரோடு தலைவர் வரப்போகிறாராம். உருப்படுமா இந்தக்கூட்டம். உலகத்தில் எந்தவொரு விடுதலைப்போராட்ட தலைவரும் பிரபாகரனைப்போல் கோவணத்தோடு போய்ச்சேர்ந்த வரலாறு இல்லை. வீரமரணம் எய்தாமல் சரணடைந்த பிரபாகரன் மக்களுக்காக தன் உயிரை தானே மாய்க்கத்தயராரக இருக்கவில்லை. அதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழ்ச்சமூகமே தயராக இருக்கவில்லை. பிரபாகரன் தமிழ்மக்களுக்காக விட்டுச்சென்றது சீரழிந்த ஒரு வரலாற்றைத்தான். இந்த உண்மை இருக்க இன்னும் அரைகுறை யாழ்ப்பாணத்தான் வரலாற்றுவீரன் தேசியத்தலைவன் என இன்டநெட்டுக்களில் வசனம் பேசிக் கொண்டு இருக்கிறான்.
கருணா பிள்ளையான் அரசியல்களில் முரண்பாடுகள் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அன்று எடுத்த முடிவால் பல ஆயிரம் கிழக்கு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கிழக்கு மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 95ல் புலிகளால் வன்னிக்கு யாழ்ப்பாணத்தான் பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டாலும் கொஞ்ச நாட்களில் திரும்ப இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த குடாநாட்டிற்கு அவன் ஒடி வந்துவிட்டான். ஆனால் புலிகளிடம் மாட்டுப்பட்ட வன்னி மக்களுக்கு இறுதியில் கிடைத்தது துன்பமும் துயரமும்தான்.
வீரவசனம் பேசிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தானுக்கு சொல்கிற புத்திமதி இதுதான். அரவணைத்துச்செல்கின்ற அரசியலுக்கு போகாமல் இருந்தால் இன்னமும் தலைவர் வருவார் புடுங்குவார் என்று ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்காமல் கால மாற்றத்திற்கேற்ப சிந்தனைகளை மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் மாறாத வரட்டுச்சிந்தனைகளுக்கள் நீயும் துலைஞ்சு சமூகத்தையும் துலைச்சுப்போட்டு நிற்பதை தவிர வேறு வழியில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக