சனி, 13 நவம்பர், 2010

அல் ஜெஸீராவுக்கு விசா மறுப்பு


அல் ஜெஸீரா செய்தி வலையமைப்பின் புதிய ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இதற்கான காரணம் கூறப்படவில்லை. செய்திப் பிரிவு ஊழியர்களுக்கான விசா விண்ணப்பத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியும் அமைச்சின் பேச்சாளருமான பந்துல ஜயசேகர டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்டதெனக் கூறி, பலர்  ட்டுக்கொல்லப்படுவதை சித்தரிக்கும் புகைப்படங்களை கடந்த புதன்கிழமை அல் ஜெஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது. மேற்படி புகைப்படங்கள் உண்மையானவை அல்லவென இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக