செவ்வாய், 23 நவம்பர், 2010

புலிகளின் புதிய தலைவர் ஆள்மாறாட்டக்காரர்

 
ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் புதிய தலைவர் ஆள்மாறாட்டக்காரர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஐரோப்பாவில் வாழ்கின்ற சிரேஷ்ட புலித் தலைவர் ஒருவர் தான் கடற்புலிகளின் தளபதி கேணல் விநாயகம் எனக் கூறியது பொய்யென தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பாவில் புலிகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள விநாயகம், நன்கு பிரபலமான கடற்புலி பிரதி தலைவரும் ஒரு காலத்தில் கடற்புலிகளின் தலைமையில் சூசை, செழியன் ஆகியோருக்கு அடுத்த நிலையில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான கடற்புலிகளின் பிரதித்தளபதி அல்ல. கடற்புலி தலைவர் விநாயகம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சாளையில் நடந்த சண்டையில் பெப்ரவரி 04, 2009இல் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஐரோப்பாவில் தோன்றிய இந்நபர் அதை மறுத்துரைத்து தன்னை இறந்ததாக அறிவிக்கப்பட்ட 'விநாயகமென' காட்டிக்கொண்டார். முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் முன், புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மானினால் தனக்கு ஒரு விசேட பொறுப்பு தரப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பிவைத்ததாகவும், தான் சண்டையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது உண்மையில்லை எனவும் ஐரோப்பாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ. வட்டாரங்களுக்கு விநாயகம் கூறினார். விநாயகம், தான் முதலில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு சென்று பின் ஐரோப்பாவிற்கு சென்றதாக கூறியதை எல்.ரீ.ரீ.ஈ. வட்டாரங்கள் நம்பின. இவர்கள் விநாயகத்தின் 'உயிர்த்தெழுகை' யை தனித்துவமாக சாதனையாக பாராட்டினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக